பகுதி 1
போன அத்தியாயத்தில் எப்படி ஒரு கதை சொல்லக்கூடாது (கட்டுக்கதை) என்பதை பார்த்தோம்.
இங்கே எப்படி தங்கள் பொருட்களை வித விதமாக சந்தைப்படுத்தி தன் வாடிக்கையாளர்களை எப்போதும் தக்கவைத்துக்கொள்கிறார்கள் என்பதை சில உதாரணங்களோடு பார்க்கலாம்.
1). DANNIJO – Jewelry Brand
இரண்டு சகோதரிகள் ஆரம்பித்த இந்த நிறுவனம் அதன் பிரத்யேகமான Visual Story Telling ல் ஈர்க்கப்பட்டு இன்று இரண்டு லட்சத்திற்கும் அதிகமான பேர் இதன் இன்ஸ்டாகிராம் பக்கத்தை பின் தொடர்கிறார்கள்.
2008 ல் ஒரு jewelry பிராண்டாக அறியப்பட்ட இந்த நிறுவனம் இன்று காலணிகள், கைப்பைகள் மற்றும் இதர வகையான பொருட்களிலும் கால் பதித்து ஒரு மிகப்பெரிய பிராண்டாக வளர்ந்து நிற்கிறது.
இதன் வெற்றியின் ரகசியம் கதை சொல்லலின் நேர்த்தி. ஒரு அழகு. கணினித்திரையில் அந்த டிசைன்களைப்பார்த்தாலே வாங்கத்தூண்டும் வகையில் இருக்கும்.
ஒவ்வொரு புகைப்படமும் ஒரு கதை சொல்லும். இல்லை, நாமே ஒரு கதையை நம் மனத்திரையில் ஓட்டிப்பார்த்துக்கொள்ளலாம்.
அப்படி ஒரு பிரமிப்பு.
அதுமட்டுமல்ல ஒரு நேர்மை இருந்தது. புகைப்படங்களில் பிரபலமானவர்கள் மட்டுமல்ல சாதாரணமானவர்களும் இருந்தார்கள். அதனால் எல்லாவகையான மக்களையும் இது ஈர்த்தது.
எல்லா தரப்பு மக்களுக்குமான பொருட்களை விற்க ஆரம்பித்தார்கள். இன்று மிக பிரம்மாண்டமான வாடிக்கையாளர்களின் அடித்தளத்தை கட்டி எழுப்பி இருக்கிறார்கள். (Customer Base)
நேர்மை.அவர்களின் கதை சொல்லலில் இருந்தது.

ஒரு பேட்டியில் இந்த நிறுவனத்தின் சகோதரிகளில் ஒருவர் இப்படிச்சொன்னார்:
” எங்களின் உண்மையான கதை சொல்லல் முறைதான் இந்த வெற்றிக்கு அடிப்படை”
மேலும், “நிறுவனங்கள் தங்களின் வாடிக்கையாளர்களின் உணர்வுகளுக்கு மதிப்பளித்து அதன் அடிப்படையில் கதை சொல்லல் இருந்தால் வளர்ச்சி தானாக அமையும்.”
சரி, இவர்கள் அப்படி என்ன செய்தார்கள்?
இவர்கள் முதலில் தேர்ந்தெடுத்த தளம் இன்ஸ்டாகிராம் (instagram) இன்ஸ்டாகிராமில் இவர்களின் வாழ்க்கை முறையை போட்டோக்கள் மூலம் பதிவு செய்தார்கள். அமோகமான வரவேற்பு இருந்தது.
பிறகு பிரபலமானவர்களின் மூலம் (Celebrity PhotoShoot) போட்டோ ஷூட் நடத்தி இவர்களின் ப்ராடக்ட்களை (Products ) விளம்பரம் செய்தார்கள்.
அதன் பிறகு இவர்கள் செய்தது தான் highlight.
பிரபலமாகாத அழகான பெண்களின் போட்டோக்கள் இவர்களின் இன்ஸ்டாகிராம் பக்கங்களை ஆக்கிரமித்தார்கள். இதற்கு அமோக வரவேற்பு அந்த சாதாரண ஆட்கள் எல்லாம் பிரபலமானார்கள்.
தொழில்நுட்பத்தை அழகாக மிகவும் நேர்த்தியாக உபயோகப்படுத்திகொண்டார்கள். பிரத்யேகமான டிசைன்களை வடிவமைத்தார்கள். அதற்கான எல்லா மென்பொருட்களையும் தங்களுக்கு சாதகமாகப்பயன்படுத்திக்கொண்டார்கள்.
அந்த புகைப்படங்களில் ஒரு வாழ்க்கை முறை இருந்தது. பாசாங்கு இல்லை. வாழ்க்கைக்கு மிக நெருக்கமாக இருந்தது. அதுதான் எல்லோரையும் கவர்ந்தது.
இவர்கள் கையாண்ட விதம் மிகவும் எளிமையானவை இருக்கும் தொழில்நுட்பத்தை வைத்து அதிக மக்களை எப்படி நேர்மையான முறையில் வாடிக்கையாளரை கவர்ந்தார்கள் என்பதே பொருள்.
அடுத்த கட்டுரையில் Airbnb எப்படி தங்களின் வாடிக்கையாளர்களை முன்னிலைப்படுத்தி கதை சொன்னார்கள் என்பதை பார்ப்போம்.
காத்திருங்கள்…..