Airbnb பற்றி ஒரு கண்ணோட்டம்
Airbnb Inc ஒரு அமெரிக்க விடுமுறை வாடகை ஆன்லைன் சந்தையாகும். Airbnb lodging, primarily homestays, or tourism experiences தங்கள் வாடிக்கையாளர்களுக்கு ஏற்படுத்திக் கொடுக்கிறது. இது தற்போது உலகளவில் 81,000 க்கும் மேற்பட்ட நகரங்களையும் 191 நாடுகளையும் உள்ளடக்கியது.
இந்த நிறுவனம் எந்தவொரு ரியல் எஸ்டேட் பட்டியலையும் சொந்தமாகக் கொண்டிருக்கவில்லை அல்லது நிகழ்வுகளை நடத்துவதில்லை. இது ஒரு broker-ஆக செயல்படுகிறது,ஒவ்வொரு முன்பதிவுக்கும் ஹோஸ்ட்களிடமிருந்து 3% கமிஷனையும், விருந்தினர்களிடமிருந்து 6% முதல் 12% வரையும் Airbnb எடுக்கிறது.

விருந்தினர்களுக்கு குறுகிய கால உறைவிடம் மற்றும் சுற்றுலா தொடர்பான நடவடிக்கைகளுடன் விருந்தினர்களுக்கு இடமளிக்க Airbnb ஒரு தளத்தை வழங்குகிறது.
விருந்தினர்கள் உறைவிடம் வகை, தேதிகள், இருப்பிடம் மற்றும் விலை போன்றவைகளை தாங்களே தேர்ந்தெடுத்துக் கொள்ளலாம்.
விருந்தினர்களின் அனுமதிக்கப்பட்ட எண்ணிக்கை, வீட்டு வகை, விதிகள் மற்றும் வசதிகள் போன்ற வாடகை அல்லது நிகழ்வு பட்டியல்களுக்கான விலைகள் மற்றும் பிற விவரங்களை ஹோஸ்ட்கள் (Host) வழங்குகின்றன.
ஹோஸ்ட்களைப் பொறுத்தவரை, Airbnb இல் பங்கேற்பது அவர்களுக்கு சிறிது வருமானம் ஈட்டுவதற்கான ஒரு வழியாகும்.
கதையின் உத்தி
Airbnb யின் பலமே இதன் கதை சொல்லல் உத்திதான். கடைசி கட்டுரையில் Dannijo நிறுவனம் எப்படி தங்களை முன்னிலைப்படுத்தி கதை சொன்னார்களோ Airbnb தங்களின் வாடிக்கையாளர்களை முன்னிலைப்படுத்தி கதை சொன்னது.
தங்களின் எல்லா விளம்பர வடிவங்களிலும் வாடிக்கையாளர்களே முதன்மைப்படுத்தப்பட்டார்கள்.இதன் அடிப்படை மிக சாதாரணமானது.
ஒரு ஊருக்குப்போகிறோம் தங்குவதற்கு நம் வசதிக்கேற்ப பண இருப்பைப்பொறுத்து எந்த ஹோட்டலில் தங்குவது என்பதை முடிவெடுப்போம்.
ஆனால் Airbnb ஒரு வித்தியாசம் செய்து பார்த்தது. மிகக்குறைந்த பட்ஜெட்டில் எல்லாரும் எல்லா நகரங்களிலும் (அல்லது கிராமங்களிலும்) தங்கலாம். அதை சாத்தியப்படுத்தினால் என்ன என்று சில முடிவுகளை எடுத்தது.
தங்களுக்கு என்று ஒரு இடம், சொத்து,ஹோட்டல் என்று எதுவும் இல்லாமல் ஒரு காரியத்தை செய்ய நினைத்தது.
ஒருவர் ஒரு (ஒன்று அல்லது அதற்கு மேலும் ) வீடு வைத்திருந்தால் அதன் ஒரு பகுதியையோ அல்லது முழுவதுமாகவோ Airbnb க்கு வாடகைக்கு விடுவது.
இங்கே வீட்டு உரிமையாளர்தான் host. வரும் guest எப்படி இருந்தாலும் அல்லது host எப்படி இருந்தாலும் கொஞ்சம் விட்டுக்கொடுத்துப்போவதுதான் என்று நீங்கள் நினைத்தால் அது தவறு.
இங்கே ஒரு கேள்வி எழலாம்
இன்னொருவர் வீட்டில் எப்படி நாம் தங்குவது? அது ஒரு அசாதாரண சூழலாக இருக்குமே? அந்த வீட்டின் உரிமையாளர் எப்படி இருப்பார் என்று தெரியாது. எப்படி நடந்து கொள்வார் என்று தெரியாது. தங்குவது சங்கடமாக ஆகிவிட்டால்?
இதற்கு அந்த வீட்டு உரிமையாளரின் போட்டோ அல்லது வீடியோ (சுருக்கமாக) Airbnb Youtube பக்கத்தில் பகிர்ந்து வைப்பார்கள். இதனால் அவரின் நம்பகத்தன்மை இன்னும் அதிகரிக்கும்.
எந்த நேரத்தில் என்ன கேள்வி எழுந்தாலும் உடனே நீங்கள் toll free அல்லது email க்கு தகவல் அனுப்பலாம். விரைந்து நடவடிக்கை எடுக்கப்படும்.
எல்லாவற்றையும் அலசி ஆராய்ந்து பிறகு வெப்சைட் அல்லது மொபைல் ஆப்பில் நீங்கள் உங்கள் புக்கிங் ஐ confirm செய்து கொள்ளலாம்.

இதில் Airbnb செய்த ஒரு அசாதாரணமான செயல் வாடிக்கையாளர்களையும் ஈர்க்க வேண்டும் வீட்டு உரிமையாளரையும் ஈர்க்க வேண்டும் இவர்களுக்கு இடையில் ஒரு பாலமாக இருக்க வேண்டும்.
அதனால் இவர்கள் இருவரையும் இணைத்து கதை சொல்லியது. அவர்கள் இருவரின் பிரச்சனைக்குத்தீர்வு சொல்லியது.
பொதுவாக ஒரு தொழிலில் ஒரு நேரத்தில் ஒருவர்க்கு தீர்வு சொல்வோம். இங்கே ஒரே நேரத்தில் இருவருக்கு தீர்வு சொல்லவேண்டும் அதுவும் அவர்களுக்கு பிடிக்க வேண்டும். இல்லையேயென்றால் booking ஐ cancel செய்து விட்டு வேறு இடத்திற்கு வாடிக்கையாளர்கள் நகர்ந்து விடலாம்.
இங்கேதான் Airbnb யின் தனி சந்தைப்படுத்துதல் உத்தி (Marketing Strategy ) மாபெரும் வரவேற்பைப்பெற்றது.
இதன் வரவேற்பு ஒரு கட்டத்தில் நிறைய (சிறிய அல்லது நடுத்தர அல்லது பெரிய ) ஹோட்டல்கள்களும் இதன் வழியாக தங்களின் அறைகளை வாடைக்கு விட்டது.
ஒரு தொழில்நுட்பம் மூலமும் தங்களின் கதை சொல்லல் மூலமும் தங்களின் நேர்மை மூலமும் தங்களின் வியாபாரத்தை பெருக்கிக்கொண்டது Airbnb!
வாடிக்கையாளர்களுக்கு தங்களின் கதை சொல்லல் உத்தி மூலம் ஒரு அனுபவத்தைக்காட்டியது இந்த நிறுவனம்.
அந்த அனுபவங்களை வீடியோ அல்லது போட்டோ மூலமும் பதிவு செய்து அவர்களே அந்த சொந்த அனுபவத்தை பகிரச்சொல்லி அடுத்தடுத்த வாடிக்கையாளர்களை ஈர்த்தது.
இதன் மூலம் எல்லாரையும் திருப்திப்படுத்தியது.
தங்களின் கதைகளை சொல்வதற்குப்பதிலாக தன வாடிக்கையாளர்களை கதை சொல்லச்சொல்லி அதில் மாபெரும் வெற்றி அடைந்தது Airbnb. தன் வாடிக்கையாளர்கள் தான் இவர்களுக்கு brand !
தங்கள் வாடிக்கையாளர்களின் வலியை மிக அழகாக ஒரு தீர்வின் மூலம் களைந்து எடுத்தது. பிறகு வாடிக்கையாளர்களே இதன் பெருமையை மற்றவர்களுக்கு எடுத்துச்சொல்லி (word of mouth marketing ) இப்போது மிகப்பெரிய ஆலமரமாக கிளை பரப்பி பறந்து விரிந்து நிற்கிறது.
இதற்கு ஒரே காரணம் தங்களின் கதைசொல்லல் முறையை கொஞ்சம் மாற்றி யோசித்தார்கள்.
அதுமட்டுமல்லாமல், அவர்களின் Logo- கூட நான்கு விஷயங்களைக் குறிக்கிறது. மக்கள்,இடம்,அன்பு மற்றும் நிறுவனத்தின் பெயர்.

இவை அனைத்தும் சேர்ந்ததுதான் எங்கள் நிறுவனம் என்று தெள்ளத்தெளிவாக வாடிக்கையாளர்களுக்கு ஒரு நம்பிக்கையை ஏற்படுத்தியுள்ளனர்.
வாடிக்கையாளர்களின் நம்பிக்கையை business-ஸில் உத்தியாகும்.
அடுத்த கட்டுரையில் கதை சொல்லலின் சில முக்கியமான அம்சங்களை பற்றி காண்போம்.
காத்திருங்கள்…..
எங்களின் அடுத்த பதிவுகளை கண்டீர்களா ?
இப்படி தான் கதை சொல்ல வேண்டும்