Skip to content
Menu
தொழில் முனைவோருக்கான இணையதளம்
  • எங்கள் சேவைகள்
  • என்னைப் பற்றி
  • தொடர்புக்கு
  • மகிழ் FM
தொழில் முனைவோருக்கான இணையதளம்

தொழில்முனைவோர்கள் Content Marketing யில் பின்பற்ற வேண்டிய 10 அம்சங்கள்

Posted on May 6, 2021May 6, 2021

டிஜிட்டல்  தொழில்நுட்பம்  ஒரு தொழிலின் வளர்ச்சிக்கு முக்கிய பங்காற்றுகிறது. அதேபோல் தொழிலை, ஒரு தயாரிப்பை அல்லது சேவையை சந்தைப்படுத்துவதிலும் டிஜிட்டல் மார்க்கெட்டிங்கை பயன்படுத்தும்போது தொழிலில் வளர்ச்சி அதிகரிக்கும். பலவகையான  டிஜிட்டல் மார்க்கெட்டிங் (digital marketing) உத்திகள் உள்ளன. அதில் ஒன்று  Content Marketing  ஆகும்.

CONTENT MARKETING என்றால் என்ன ?

Content Marketing என்பது நிறுவனம், தொழில், தயாரிப்பு (product), சேவை (service) தொடர்பானவற்றை கட்டுரையாகவோ, செய்தியாகவோ, தகவல்களாகவோ, வீடியோவாகவோ, ட்வீட் (tweet), இன்போகிராபிக்ஸ் (Infographics), மீம்ஸ் (meme), விமர்சனங்கள் (review), பேட்டிகள் (interview), வழிகாட்டிகள் (guides), கருத்து பதிவு (opinion post), தரவுகள் (data) , Link post, e book, podcasts போன்ற பலதரப்பட்ட Content ஐ இணையத்தளம், blog, சமூக வலைத்தளம், வீடியோ சேனல் போன்ற டிஜிட்டல் ஊடகத்தில் (digital media) வெளியிடுவது Content Marketing ஆகும்.

Content marketing ஐ மிகச்சிறப்பாக செய்ய சில வழிமுறைகளை பின்பற்றலாம்.

பொருத்தமான படங்களை பயன்படுத்துதல் (Use Relevant Images)

ஆயிரம் வார்த்தைகள் சொல்லக்கூடிய விளக்கத்தை ஒரு படம் சொல்லிவிடும். இப்போது சமூகவலைத்தளம் மற்றும் பலவற்றில் ஒரு கருத்தை எளிமையாக விளக்க படங்கள் (image) பயன்படுத்தப்படுகின்றன.

இதேபோல் ஒரு நிறுவனத்தைப் பற்றி விளக்க, பிராண்டு, தயாரிப்பு மற்றும் சேவையைப் பற்றி விளக்க பயன்படுத்தப்படும் content யில்  (உள்ளடக்கம்) படங்கள் பயன்படுத்தப்படுகின்றன.

இந்த படங்கள் content க்கு உறுதுணையாக இருக்கின்றன மற்றும் பார்வையாளர்களை கவர, ஈர்க்க படங்கள் உதவுகின்றன. எனவே content க்கு பயன்படுத்த மிகவும் பொருத்தமான, சரியான படங்களை தேர்ந்தெடுக்கவேண்டும்.

அந்த படங்கள் நாம் சொல்ல வரக்ககூடிய விளக்கங்களை, கருத்துகளை, பொருளை பிரதிபலிப்பதாக இருக்கவேண்டும்.  மேலும் படங்கள் அதிக தரம் (quality) உள்ளவையாக இருக்கவேண்டும்.

அந்த படங்கள் நமக்கு சொந்தமான படங்களாக (copy rights) இல்லாதபட்சத்தில் எங்கிருந்து எடுக்கப்பட்டது என்பதை குறிப்பிடவேண்டும் like, IMAGE SOURCE: GOOGLE. இதுபோன்று.

Content ஐ அடிக்கடி பதிவிடவேண்டும்

நாம் ஏதேனும் டிஜிட்டல் மார்கெடிங் பயன்படுத்தி வளர்ச்சியடையும் நிறுவனங்களை பார்த்தோமானால் அவர்கள் நிறுவனம் சார்ந்த பதிவுகளை (post) மற்றும் content ஐ  அவர்களின் இணையதளத்தில், சமூக வலைத்தளத்தின் பக்கங்களில், இமெயில் வழியாகவும், பிற இணைய ஊடக தளத்திலும் அடிக்கடி பதிவிடுவார்கள்.

அந்த பதிவு  பார்வையாளர்களின் கவனத்தை ஈர்த்து அவர்களை வாடிக்கையாளர்களாக மாற்ற உதவும். எனவே தொழில் சார்ந்த பதிவுகளை அடிக்கடி வெளியிடுவது வாடிக்கையாளர்களை பெற உதவும்.

Content பதிவிட்ட தேதியை குறிப்பிடவேண்டும். இது பார்வையாளர்களுக்கு, அடிக்கடி பதிவிடுகிறார்கள் என்பதை தெரியப்படுத்தும். அடுத்தடுத்த பதிவுகள் படிக்க அவர்களை தூண்டும்.

உங்கள் பார்வையாளர்கள் மற்றும் வாடிக்கையாளர்களை பற்றி தெரிந்து வைத்து கொள்ளுங்கள்

உங்கள் பதிவுகளின் மற்றும் content உடைய பார்வையாளர்களை பற்றி தெரிந்து வைத்துகொள்ளவேண்டும். பார்வையாளர்கள் எந்த மாதிரி வெளியிட்டால் அவர்களுக்கு பிடிக்கும், எதற்கு அதிக முக்கியத்துவம் கொடுகிறார்கள், எதை அதிகம் விரும்புகிறார்கள், எதை தேர்ந்தெடுக்கிறார்கள் போன்றவற்றை தெரிந்து வைத்துக்கொள்ளவேண்டும். அதற்கேற்றார் போல் content ஐ உருவாக்க வேண்டும்.

முக்கியமானவற்றை கோடிட்டு காட்டுவது, பெரியதாக காட்டுவது, தனித்து காட்டுவது போன்றவற்றை செய்வதால் அவர்களுக்கு அந்த content ஐ படிக்க தூண்டும்.

SEO KEYWORD

வாடிக்கையாளர்கள் கூகுள் போன்ற தேடு பொறியில் என்னென்ன வார்த்தைகளை பயன்படுத்தி தேடுவார்களோ அதுவே SEO keyword ஆகும்.

கூகுள் போன்ற தேடு பொறியின் முன்னணி பக்கத்தில் உங்கள் நிறுவன இணையத்தளம் வர அந்த இணையத்தளத்தில் இடம்பெற்றுள்ள content மிக முக்கிய பங்காற்றுகிறது. தேடு பொறியின் 3 வது, 4 வது பக்கத்தில் உங்கள் இணையத்தளம் வருமானால் தேடுபவர்கள் உங்கள் இணையத்தளத்திற்கு வரமாலேயே போக வாய்ப்புள்ளது.

நிறுவன இணையத்தளம் முன்னணி பக்கத்தில் வருவதற்கு அதில் உள்ள content யில் சரியான keyword இடம்பெற்றிருக்க வேண்டும்.  அப்பொழுதுதான் வாடிக்கையாளர்கள் கூகுளில் தேடும்போது உங்கள் இணையதளம் முன்னணி பக்கத்தில் வரும்.

பதிவிடும் Content விற்பனைக்கு வழி வகுக்கவேண்டும்

Content மார்க்கெட்டிங் நோக்கமே விற்பனையை அதிகப்படுத்த வேண்டும் என்பதே. நிறுவனம் வெளியிடும் கன்டென்ட் விற்பனைக்கு (sales) வழி வகுக்கவில்லையென்றால் மறுபடியும் மறுபரிசீலனை செய்து content ஐ விற்பனையை தூண்டும் விதமாக வெளியிடவேண்டும்.

பார்வையாளர்களை தொடர்ந்து தக்கவைக்குமாறு அமைக்க வேண்டும்

பார்வையாளர்கள் ஒரு முறை மட்டும்  content  ஐ படிக்க வைப்பதாக இல்லாமல் தொடர்ந்து உங்கள் தொழிலின் content ஐ படிக்க வைப்பதற்காக அவர்களை உங்கள் newsletter பதிவு (subscribe) செய்ய ஊக்குவித்தல், சமூக வலைத்தளத்தின் பக்கங்களை பின்பற்ற ஊக்குவித்தல் போன்றவற்றை செய்யவேண்டும்.

இதனால்  அவர்கள் தொடந்து உங்களின் பதிவுகளை பார்ப்பார்கள்.

Content ஐ பலவகைகளில் பதிவிடுங்கள்

நிறுவனம் தொடர்பான content ஐ கட்டுரை (article) அல்லது blogs ஆக மட்டுமல்லாமல் பல வகைகளில் பதிவிடலாம். ட்வீட் (tweets), இன்போகிராபிக் (infographics), webinars, podcasts மற்றும் வீடியோ போன்ற பலகைகளில் content ஐ மார்க்கெட்டிங் செய்யலாம்.

வெளிப்படுத்த வேண்டிய விஷயத்திலிருந்து விலகாமல் இருக்க வேண்டும்

தொழில்முனைவு (entrepreneurship), நிதி சார்ந்த கட்டுரை (finance), சமூக செய்தி (social message), ஒரு ஃபேஷன் வலைப்பதிவு, ஒரு பயண கதை அல்லது ஒரு தொழில்நுட்ப கட்டுரை (tech article) போன்ற எது சம்பந்தமாக வெளியிட விரும்புகிறீர்களோ அந்த விஷயத்திலிருந்து விலகாமல் பார்த்துக்கொள்ள வேண்டும்.

குறிக்கோள் வாசகத்தை (mission statement) தாங்கி இருத்தல், முக்கிய செய்தியை (core message) கொண்டிருத்தல் மற்றும் இதை சரியான படங்களை (image) கொண்டு வெளிப்படுத்தலாம்.

முக்கியமானவற்றை பதிவிடுங்கள்

டிஜிட்டல் மீடியாவில் எழுதும் போது பல அம்சங்களை கருத்தில் கொள்ளவேண்டும்.  இப்போது என்ன ட்ரெண்ட் (trending) உள்ளது என்பதை அறிந்து content வெளியிடவேண்டும்.

தள்ளுபடி கூப்பன்கள் (discount coupon) அல்லது விற்பனை (sale) அறிவிப்புகள், வாடிக்கையாளர்களுக்கு விருப்பமானவைகள் (favorites) போன்றவற்றை டிஜிட்டல் ஊடகத்தில் வெளியிட வேண்டும்.

வெளியிட்ட Content ஐ விளம்பரப்படுத்துவது (promotion)

நிறுவனம் தொடர்பான content வெளியிடுவது எவ்வளவு முக்கியமானதோ அந்தளவிற்கு அதை விளம்பரப்படுத்துவதும், அதை மக்களை பேச வைப்பதும் முக்கியமானது.

உதாரணத்திற்கு ஒரு content-ஐ சமூக ஊடகத்தில் (social media) பரவ செய்வது, வீடியோவை வைரலாக தேவையானவற்றை செய்வது, வாடிக்கையாளர்களுக்கு newsletter அனுப்பி உங்களிடம் ஒரு தொடர்பை ஏற்படுத்த செய்வது, படிப்பவர்களை பகிர (share) வைப்பது, அவர்களின் கருத்துக்களை பதிவிட (comment) வைப்பது போன்றவற்றை செய்ய வேண்டும்.

WORTH READING

வாழ்க்கையிலும் தொழிலிலும் வெற்றி பெற சில குறிப்புகள் 

வாடிக்கையாளர்களைக்கவர CONTENT MARKETING பயன்படுத்துங்கள் 

SWOT Analysis எப்படி உருவாக்குவது

ஒரு நிறுவனத்திற்கான Trademark ஐ பெறுவது எப்படி 

நிறுவனத்தின் லோகோவை உருவாக்கும்போது கவனிக்க வேண்டிய 10 விஷயங்கள்

Leave a Reply Cancel reply

Your email address will not be published. Required fields are marked *

தொழில் முனைவோருக்கான தகவல்

எனது புதிய புத்தகம்
"பணம் - உங்கள் பிறப்புரிமை"
வெளியாகி இருக்கிறது.
படித்துவிட்டுச்சொல்லுங்கள்.


writersrinivasan@gmail.com

சமீபத்திய இடுகை

  • அவதாரம் 2.0 August 5, 2021
  • பணம் – உங்கள் பிறப்புரிமை புத்தக வெளியீட்டுவிழா! July 28, 2021
  • கவிஞர் மனுஷ்யபுத்திரனோடு ஒரு சந்திப்பு! July 19, 2021
  • பணம் – உங்கள் பிறப்புரிமை July 12, 2021
  • தொழில்முனைவோர்கள் Content Marketing யில் பின்பற்ற வேண்டிய 10 அம்சங்கள் May 6, 2021
  • வாழ்க்கையிலும் தொழிலிலும் வெற்றி பெற சில குறிப்புகள் April 22, 2021
  • வாடிக்கையாளர்களைக்கவர CONTENT MARKETING பயன்படுத்துங்கள் April 16, 2021
  • SWOT Analysis எப்படி உருவாக்குவது April 12, 2021
  • ஒரு நிறுவனத்திற்கான Trademark ஐ பெறுவது எப்படி April 9, 2021
  • நிறுவனத்தின் லோகோவை உருவாக்கும்போது கவனிக்க வேண்டிய 10 விஷயங்கள் April 8, 2021
https://www.youtube.com/watch?v=7TW7hYjxisE
©2022 தொழில் முனைவோருக்கான இணையதளம் | Powered by WordPress and Superb Themes!