போன பதிவில் Padma Singh Isaac- வெற்றிக் கதை பற்றி பார்த்தோம். அதன் தொடர்ச்சியாக அவர்களின் வெற்றிக்கு காரணம் என்ன என்பதை இந்த பதிவில் நாம் காணலாம்.
இப்போது உள்ள இளைஞர்களுக்கு வாழ்வில் வெற்றி பெற வேண்டும் என்பது ஒரு ஆசையாகவே இருந்து வருகிறது. ஆனால் ஒரு தோல்வியோ அல்லது ஒரு கஷ்டமோ கண்டால் துவண்டு போகிறார்கள்.
நிறைய இளைஞர்களுக்கு தெரியவில்லை ஒரு தோல்விக்கு பின்னால் அல்லது ஒரு கஷ்டத்திற்கு பின்னால் ஒரு வாய்ப்பு இருக்கிறது என்பதை.
பின்வாங்காமல் இதிலிருந்து எப்படி போராடி வரலாம் என்பதை கண்டுபிடித்தால் நிச்சயம் அவர்கள் வெற்றியாளர்களே.
இளைஞர்களுக்கு ஐசக் சொல்வது
இளைஞர்களுக்கு குறிப்பாக ஒன்றை சொல்ல ஆசைப்படுகிறேன். ஒருவேலையை ரசித்து, ருசித்து செய்தால் உங்கள் பங்களிப்பு அதிகமாக இருக்கும்.
உங்களுக்கு ஒரு பிடித்த வேலையை செய்யும் போது அதனுள் இருக்கும் ஆர்வம் மிக அதிகமாகவே இருக்கும். வாழ்வில் என்றாவது ஒரு நாள் இதை நீங்கள் உணர்ந்திருப்பீர்கள் சற்று யோசித்துப் பாருங்கள்.
உங்களுக்கு விடை கிடைக்கும்.
பின்னர், நீங்கள் உயரத்துக்கு செல்வதை தடுக்க முடியாது. வேலை செய்யும் இடத்தில் நான் இந்த நிறுவனத்தின் முதலாளி முதலாளி என்ற எண்ணத்தில் வேலை செய்யுங்கள். நேரம் பார்க்காதீர்கள்.
அந்த உழைப்பால் உயர்ந்த நிலைக்கு செல்வீர்கள்.அந்த வெற்றியை அனுபவியுங்கள்.
வெற்றிக்கான காரணம்
எந்த ஒரு தொழில் எடுத்துக்கொண்டாலும் முதலீடு மற்றும் உபகரணங்கள் வைத்து வணிகம் செய்ய முடியும். ஆனால் மக்களிடையே கொண்டு போய் சேர்க்க வேண்டும் என்றால் ஊழியர்கள் மற்றும் விநியோகஸ்தர் அவசியம் தேவை.

ஊழியர்கள் தொழிலாளர்கள் மட்டுமல்ல அவர்கள் வணிகத்தின் முதுகெலும்பாகும்.நமக்கு ஏதும் தோல்விகள் வந்தால் முதலில் வருவது ஊழியர்கள் மட்டுமே clients அல்ல.
ஊழியர்களை நன்றாக பார்த்துக் கொண்டால் வணிகத்தை அவர்கள் பார்த்துக் கொள்வார்கள் என்பதை தெளிவாக அறிந்து வைத்திருந்தார்.
சமீபத்தில், பேட்டி ஒன்றில் அவர் ஊழியர்களுக்கும் Distributors- கும் நன்றியை தெரிவித்துக் கொண்டார். ஏனெனில் அவர்கள் இல்லாமல் இந்த நிறுவனம் இந்த அளவுக்கு வந்திருக்க முடியாது எனவும் குறிப்பிட்டு இருந்தார்.
நல்ல பணியாளர் = நல்ல வணிகம்
Good employees = Good business
ஊழியர்கள்
பல நிறுவனங்கள் ஊழியர்களின் திறன் குறைவாக உள்ளது என்று எல்லாம் பணியை விட்டு நீக்குவார்கள்.
ஆனால் ஐசக் அப்படிச் செய்வதில்லை. எல்லோரிடமும் ஒரு திறமை இருக்கும். அதற்கு ஏற்றப் பணியை மாற்றி அளித்து, ஊக்கமளித்து வேலை வாங்குவதாகவும் யாரும் பணியில் இருந்து நீக்குவதில்லை என்றும் ஐசக் கூறினார்.
மாற்றுத் திறனாளிகள்
தனது நிறுவனத்தில் 100-க்கும் மேற்பட்ட மாற்றுத்திறனாளி ஊழியர்கள் பணிப்புரிவதகாவும், 500-க்கும் மேற்பட்ட ஊழியர்கள் பிற மாநிலங்களில் இருந்து பணிப்புரிவதாகவும் அவர்களுக்கு ஏற்ற வேலை மற்றும் தங்குமிடம் இலவச உணவு போன்றவற்றை அளிப்பதாகவும் தெரிவித்தார்.
வாய்ப்புகள்
புதிய வாய்ப்புகளை நோக்கி தனது காதை எப்போதும் கூர்மையாக வைத்து இருப்பதாகவும் எந்த வாய்ப்பினையும் தவறவிட்டதில்லை என்றும், கிராமப்புற சந்தையினைப் பிடிப்பதில் மிகப் பெரிய கவனம் செலுத்தி வருவதாகவும் கூறுகிறார்.
மேலும்,தற்போது 6 மாநிலங்கள் சார்ந்த மசாலாக்களை உற்பத்தில் செய்து வருவதாகவும், சர்வதேச மசாலா பொருட்களையும் தயாரித்துச் சந்தைப்படுத்தி வருவதாகவும் தெரிவித்தார்.
வளர்ச்சி
சென்ற மூன்று ஆண்டுகளில் மட்டும் 30 சதவீத வளர்ச்சியினை ஆச்சி மசாலா பெற்றுள்ளதாகவும் தேசிய அளவில் 15 சதவீத சந்தையினைத் தன் வசம் வைத்துள்ளதாகவும், 4,000 ஏஜெண்ட், 12 லட்சம் சில்லைரை வணிகர்கள் ஆதரவுடன் 1,200 கோடி ரூபாய் வரை வர்த்தகம் செய்து வருகிறார்.
சர்வதேச சந்தை
“ தடைகளை தட்டிக் கழிப்பதை விட அதை தகர்த்து விடுவது தான் புத்திசாலிதனம்” என்ற வார்தையை வாழ்வாக்கி காட்டியவர் தான் ஐசக்.
ஆச்சி மசாலா தயாரிப்புகள் ஐக்கிய அமெரிக்கா, கனடா, யு.கே, பெல்ஜியம், ஹாலந்து, பிரான்ஸ், டென்மார்க், சுவீடன், சுவிட்சர்லாந்து, ஜெர்மனி, ஆஸ்திரேலியா, நியூசிலாந்து, தென் ஆப்பிரிக்கா குடியரசு, D.R.காங்கோ, கென்யா, தன்சானியா, பப்புவா நியூ கினியா, மொசாம்பிக், மொரிஷியஸ்,
சீஷெல்ஸ், ஐக்கிய அரபு அமீரகம், கத்தார், குவைத், சவுதி அரேபியா இராச்சியம், லெபனான், இலங்கை, மாலதீவு, சிங்கப்பூர், மலேசியா, தாய்லாந்து, கொரியா மற்றும் ஜப்பான் ஆகிய நாடுகளின் சூப்பர் மார்க்கெட்களிலும் கிடைப்பது குறிப்பிடத்தக்கது.
ஆச்சி மசாலாவைப் பற்றியும் அதன் தரத்தைப் பற்றியும் வதந்திகள் பரவிய போதும் பலர் அந்த நிறுவனத்தை முடக்கி விட ஆயிரம் முயற்சிகள் செய்த போதும் கூட அந்த அத்தனை தடைகளையும் தவிடு பொடியாக்கி “ஒரு தமிழனின் இந்த புராடக்ட்(product)இன்று உலகமெல்லாம் கொடி கட்டி பறக்கிறதென்றால்“அது சாதாரணமான விஷயம் இல்லை.
இது ஒரே நாளில் நடந்து விடவும் இல்லை.
தோல்வி பட்டவனுக்குத் தான் வெற்றியின் அருமை தெரியும்
எனவே தன்னம்பிக்கை ஒன்றை மனதில் வைத்து வெற்றிக்கான பாதையை நோக்கி பயணம் செய்வோம் இந்த நவீன உலகில். 😊
“விடாமுயற்சி விஸ்வரூப வெற்றி”-அதற்கு அவர்கள் கடந்து வந்த பாதையை எடுத்துக்காட்டாகும்.
காத்திருங்கள்!
அடுத்த பதிவில் சந்திப்போம்!
Read other articles here,