வெற்றியாளராக இந்த உலகில் யாரும் பிறக்கவில்லை.நம்மீது விழும் கேள்வி குறிகளையும் ஆச்சரிய குறிகளையும் தனக்கு சாதகமாக பயன்படுத்த தெரிந்தவர் மட்டுமே மிகப்பெரிய சாதனையாளர்கள் ஆகின்றனர். 😊
போன பதிவில் அமேசான் நிறுவனரை பின்னுக்கு தள்ளி முதலிடம் பிடித்த எலான் மஸ்க் பற்றி பார்த்தோம்.அதன் தொடர்ச்சியாக அவர்களின் வெற்றிக்கு காரணம் என்ன என்பதை இந்த பதிவில் நாம் காணலாம்.
12 வயதில், கேமிங் குறியீடுகளைக் (Gaming codes) கற்க அவருக்கு ஒரு யோசனை இருந்தது, மேலும் “பிளாஸ்டர்ஸ்” (Blasters) என்ற விளையாட்டைக் கண்டுபிடித்து அதை $ 500 க்கு விற்றார்.
அவர் தற்போது நடத்தி வரும் அனைத்து வணிகத்தின் தொடக்க புள்ளியாக இது இருந்திருக்கலாம்.
அவர் எழுப்பிய கோட்டையை பற்றி காண்போம். 😉
ZIP2 மென் பொருள் நிறுவனம்
1995 இல் தன்னுடைய சகோதரர் கிம்பல் மஸ்க் உடன் இணைந்து Zip2 எனும் ஐடி நிறுவனத்தை துவங்கினார்.
அதிகாலையில் வேலையை துவங்கினால் மாலைவரை
கடுமையாக உழைப்பவர் எலான்.
அப்போது தான் இன்டர்நெட் கொஞ்சம் கொஞ்சமாக வளரத்துவங்கியிருந்த காலம்.ஆனால் ஒருவரும் அதிலிருந்து கணிசமான லாபத்தை சம்பாதித்திருக்கவில்லை.
அனைத்துப் பங்குகளையும் விற்கும் நிலைமைக்குத் தள்ளப்படுகிறார். இவர் தொடர்ந்து தோல்விகளைச் சந்தித்தே வந்தாலும் தன்னுடைய முயற்சியை மட்டும் ஒருபோதும் நிறுத்துவதாயில்லை.
ஆனால் அனைத்துப் பங்குகளையும் தானே வாங்க வேண்டிய நிலைமைக்கு தள்ளப்படுகிறார்.இதனால் பெரும் சரிவை சந்திக்க வேண்டிவருகிறது.
1999 இல் அல்டாவிஸ்டா (Altavista) எனும் சர்ச் என்ஜின்
நிறுவனம், Zip 2 கம்பெனியை $307 மில்லியன் பணம் மற்றும் $34 மில்லியன் காப்புத்தொகைக்கு வாங்கியது.
PAYPAL தொடக்கம்
X.com என்ற இணையவழி மூலம் பண பரிவர்த்தனை செய்யும் மென்பொருள் நிறுவனத்தை துவங்கினார்.
இந்த துறையில் போட்டியை தவிர்க்க Confinity எனும் நிறுவனத்துடன் இணைந்து ஒப்பந்தம் செய்து கொண்டார்.
அதன் பிறகே, 2001 இல் புதிய நிறுவனத்திற்கு Paypal என பெயர் மாற்றம் செய்யப்பட்டது. Paypal நிறுவனத்தின் சேர்மன் ஆக உயர்ந்தார் எலன் மஸ்க்.

PAYPAL இன் இந்த வளர்ச்சி மக்களிடையே பிரபலம் அடைந்தது. ஆனால் மற்றொரு இணைய சேவை நிறுவனமான ebay இன் கண்களை உறுத்தியது.
எனவே 2002 -இல் Paypal நிறுவனத்தை ebay 1.5 பில்லியன் டாலருக்கு வாங்கியது.
PAYPAL இன் 49% பங்கு எலானிடம் இருந்தது.அவருடைய பங்காக 180 மில்லியன் டாலர் அவருக்கு கிடைத்தது.
தற்போது இருக்கும் டிஜிட்டல் பண பரிவர்த்தணை முறைக்கு எலான் மஸ்க் தான் முன்னோடி என்று கூறினால் அது மிகையாகாது. 😎
TESLA CARS
மார்ட்டின் எபர்ஹார்ட் மற்றும் மார்க் டார்பென்னிங் எனும் இரண்டு பேரால் 2003 ஆண்டு தொடங்கப்பட்டது தான் டெஸ்லா மோட்டார்ஸ் நிறுவனம்.
பெட்ரோல் மற்றும் டீசல் அல்லாத, மின்சாரத்தின் மூலமாக இயங்கக்கூடிய காரினை வடிவமைப்பதில் ஈடுபட்ட முதல்
பெருமைக்குரிய நிறுவனம் என்றே சொல்லலாம்.

மாற்று எரிபொருள் பற்றிய தனது விருப்பத்தோடு டெஸ்லா ஒத்துப்போனதால் 70 மில்லியன் டாலரை தனது பங்களிப்பாக கொடுத்து இயக்குனராக இணைந்துகொண்டார்.
Tesla Roadster எனும் முதல் எலெக்ட்ரிக் கார் வடிவமைப்பில் ஈடுபட்டதற்காக Global Green 2006 product design award ஐ பெற்றார்.
எரி பொருள் கார்கள் செல்லும் வேகத்துக்கு இணையான ஸ்போர்ட்ஸ் கார்களை உருவாக்கி கார் உற்பத்தி உலகில் ஒரு புரட்சியையே செய்தது டெஸ்லா.
SPACE X-ற்கான விதை
மிகப் பெரிய செயலை செய்யும் முன் 100 சின்ன விஷயங்களை செய்ய வேண்டும் என்று கூறுவார்கள்.
அதே போல் தான் செவ்வாயில் மனிதர்களை குடியேற்ற வேண்டும் என்ற தனது நீண்ட கால கனவிற்காக இத்தனை நாட்களாக பல தொழில்களில் ஈடுபட்டு வருவாய் ஈட்டி வந்தார்.
அதற்கான சமயம் வந்து விட்டது என்று எண்ணினார். விண்வெளி ஆராய்ச்சிக்கு மிக முக்கியமானது ராக்கெட்.
ஏற்கனவே நிபுணத்துவம் பெற்ற ரஸ்யாவிடம் இருந்து வாங்க
எண்ணி ரஷ்யா சென்று விஞ்ஞானிகளை சந்தித்தார் எலன் மஸ்க். பேச்சுவார்த்தை நடத்தியதில் ஒரு ராக்கெட் தயாரிக்க 8 மில்லியன் வரை செலவாகும் என்று கூறியுள்ளனர்.
ஆனால் ராக்கெட் தயாரிப்பதற்கு தேவைப்படுகின்ற பொருள்களின் விலை இதில் வெறும் 2% தான்.
எனவே ராக்கெட் பாகங்களை நாமே தயாரித்தால் என்ன?என்ற சிந்தனை எலானுக்கு தோன்றியது.
விளைவு 2002 ஆம் ஆண்டு SpaceX நிறுவனம்துவங்கப்பட்டது.
உலகின் முதல் தனியார் விண்வெளி நிறுவனம் என்ற பெருமையை SPACE X பெற்றது. 2006 இல் தனது முதல் ராக்கெட் “பால்கனுவானை” விண்ணில் செலுத்த தயாரானது.
ஆனால் கிளம்பிய சில வினாடிகளிலேயே வெடித்து சிதறியது.தனது கண் முன்னே தனது கனவுகள் சுக்கு நூறாகிப் போன தருணம் அது.
அடுத்த இரண்டு முயற்சிகளும் தோல்வியிலேயே
முடிந்தன.தோல்வியின் மொத்த உருவமாகவே பார்க்கப்பட்டார் எலன்.
ஆனால் தோல்வியைக் கண்டு துவளாமல் நான்காவது முயற்சியில் ஈடுபட்டார். 💪
Falcon 1 வெற்றிகரமாக புவி சுற்றுவட்டபாதையை அடைந்தது. எலான் மஸ்க் காத்துக்கொண்டிருந்த வெற்றி அவருக்கு
கிடைத்தது.
எலானை கிண்டல் செய்தவர்கள் முகத்தில் கரியை பூசியது Falcon ஒருவேளை இதுவும் தோல்வியை தழுவி இருந்தால் SpaceX மூடப்பட்டிருக்கும் என்கிறார்கள்.
இந்த வெற்றிக்கு பிறகு $1.6 பில்லியன் மதிப்பிலான ஒப்பந்தத்தை SpaceX போடுகிறது. அதன் பின்னர் அரசின் உதவி இன்றியே வெற்றிகரமாக பல ராக்கெட் என்ஜின்களை வடிமைத்தது.
SpaceX அதே போல அவருடைய falcon heavy ராக்கெட்டில் தனது டெஸ்லான் காரை பயணம் செய்ய வைத்தார்.இதன் மூலம் விண்வெளியில் பயணம் செய்யும் முதல் கார் என்ற
பெருமையை டெஸ்லா பெற்றது.
அதன் பிறகு விண்வெளிக்கு செல்லும் விமானங்களை
வடிமவமைப்பதில் தொடர்ந்து ஈடுபட்டுக்கொண்டே இருக்கிறது SpaceX.
ஒருமுறை எலன் மஸ்க் கூறிய வார்த்தைகள் இவை
“நான் செவ்வாய் கிரகத்தில் இறக்க விரும்புகிறேன், தாக்கத்தால் மட்டுமல்ல”என தனது கனவின் உறுதியை காட்டுகிறார்.
தோல்வியை விருப்பமானதாக ஆக்கிக் கொள்ளுங்கள்.
ஹைப்பர்லூப் ( Hyperloop)
எலான் மஸ்க்கை உலகம் உற்று கவனிப்பதற்கு முக்கிய காரணம் அவரின் மற்றுமொரு சிந்தனை ஹைப்பர்லூப்.
இந்த தொழில்நுட்பத்தை பயன்படுத்தி பயணிக்கும் போது
விமானத்தில் பயணிப்பதை காட்டிலும் விரைவாக செல்ல முடியும் என்பது எலன் மஸ்க்-இன் வாதம்.
செவ்வாய் கிரகத்தின் வளிமண்டலத்தில் ஆக்ஸிஜன் இல்லாததால், அனைத்து போக்குவரத்தும் மின்சார விமானங்கள், மின்சார கார்கள், மின்சார ரயில்கள், ஹைப்பர்லூப் உள்ளிட்ட மின்சாரமாக இருக்க வேண்டும்.
ஜூன் 2016-இல், எலோன் மஸ்க், 2022 ஆம் ஆண்டில் செவ்வாய் கிரகத்திற்கு புறப்படுவதற்கு திட்டமிடப்பட்ட பெரிய larger Interplanetary Starship முதல் விமானம் பறக்க பட்டுள்ளது.

எலன் மஸ்க் உண்மையாகவே 21 ஆம் நூற்றாண்டின் சிறந்த அறிவியல் சிந்தனையாளர்.நவீன தொழில்நுட்பத்தின் ஊற்றாக அவர் இருப்பதை யாராலும் மறுக்க முடியாது.
அதற்கு மிக முக்கிய காரணம், புதிய சிந்தனைகள் மட்டுமே அல்ல. எதிர்காலத்தில் மனிதர்களுக்கு எது பயன்படும் என்பதை அறிந்து தனது சொந்தப்பணத்தையே முதலீடாக போட்டு அரசுக்கு
நிகராக தனி சாம்ராஜ்யம் நடத்திக்கொண்டு இருக்கிறார்.
பல உலக நாடுகளே விண்வெளிக்கு ராக்கெட் அனுப்புவதில் போட்டி போட்டு கொண்டிருக்கும் வேளையில் தனி ஒருவனாய் அதில் கொடி கட்டி பறந்து கொண்டிருக்கிறார்.
கனவுகள், சிந்தனைகளை யாருக்கும் வரலாம். ஆனால் சிலரே அதனை நிறைவேற்ற போராடுகிறார்கள்.
ஏன் என்றால் வெற்றிகளால் உருவானவர் அல்ல.தோல்விகளால்
தோன்றியவர் Elon musk. 💪
தொடர் தோல்விகளை தோற்கடித்து அசாத்தியங்களை சாத்தியமாக்கியவர். மனித இனத்தை தொழில் நுட்ப வளர்ச்சிகளின் மூலம் அடுத்த கட்டத்துக்கு எடுத்து செல்வதில் முதன்மையானவர் எலான் மஸ்க்.
அவர் இன்று அமைக்கும் வழியில் தான் நாளைய சமூகம்
பயணிக்கும் என்பதில் மாற்றுக் கருத்து இல்லை.😀
இவரது வாழ்க்கையில் இருந்து தெரிந்து கொள்ள வேண்டிய ஒரே விஷயம் விடாமுயற்சியும் கனவும் என்றும் ஓயாமல் இருக்க வேண்டும்.
Also read,
அமேசான் நிறுவனரை பின்னுக்கு தள்ளி முதலிடம் பிடித்த எலான் மஸ்க்
ராம்ராஜ் காட்டன் கடந்து வந்த பாதை
வசந்த்&கோ நிறுவனர்-கடந்து வந்த பாதை
உங்கள் கருத்துக்களை,