Skip to content
Menu
தொழில் முனைவோருக்கான இணையதளம்
  • எங்கள் சேவைகள்
  • என்னைப் பற்றி
  • தொடர்புக்கு
  • மகிழ் FM
தொழில் முனைவோருக்கான இணையதளம்

ஒரு நிறுவனத்திற்கான Trademark ஐ பெறுவது எப்படி

Posted on April 9, 2021April 9, 2021

TRADEMARK என்றால் என்ன ?

ஒரு தனிநபரோ, வணிக நிறுவனமோ, அல்லது பிற சட்டப்படியான நபரோ தமது பொருளையோ, சேவையையோ தனது வாடிக்கையாளர்களிடம் தனித்துவமாய் அடையாளப்படுத்தப் பயன்படுத்தும் தனிப்பட்ட சின்னம் அல்லது  வர்த்தக்குறி (Trademark) எனப்படும்.

இது ஒருவர் வழங்கும் பொருள் மற்றும் சேவையைப் பிறரிடமிருந்து தனிமைப்படுத்திக் காட்ட உதவும்.

trademark details-writersrinivasan.in

வணிக முத்திரை என்பது கீழ்கண்ட குறிகளின் மூலம் குறிக்கப்படுகிறது.

  • ™ ( பொருளைத் தனித்துவப்படுத்தும் பதிவுசெய்யப்படாத வணிகச்சின்னத்தைக் குறிக்க )
  • ℠(சேவையைத் தனித்துவப்படுத்தும் பதிவுசெய்யப்படாத வணிகச்சின்னத்தைக் குறிக்க)
  • ® (பதிவிட்ட வணிகச்சின்னத்தைக் குறிக்க )

வணிக முத்திரை என்பது பொதுவாக பெயராகவோ, சொல்லாகவோ, சொற்றொடராகவோ, சின்னமாகவோ, இலச்சினையாகவோ, படமாகவோ, வடிவமைப்பாகவோ, அல்லது இவை கலந்தோ அமையப்பெறும்.

ஒரு நிறுவனம் மற்றும் பொருளுக்கான (product) தேர்ந்தெடுக்கும் பெயர் அந்த நிறுவனத்தின் பிராண்ட் உருவாக்கத்திற்கு உறுதுணையாக இருக்கிறது. 

அந்த பிராண்ட் (brand) வாடிக்கையாளர்களுக்கு நம் நிறுவனத்தை மட்டும் நினைவூட்டுவதாக இருக்க வேண்டும்.

இது குறித்த சரியான வழிமுறைகளை தொழில்முனைவோர் அறிந்திருத்தல் அவசியம்.வேறு யாரும் நம் நிறுவனம் மற்றும் பொருளின் பெயரை பயன்படுத்துவதை தடுக்க, பெயர் கண்டிப்பாக பதிவு செய்யப்படவேண்டும். நம் நிறுவனத்திற்காக ட்ரேட்‌மார்க் (TRADEMARK)பெற்றுக்கொள்ளுதல் மிக அவசியம்.

பிரிவு 3(1) சட்டத்தின்படி சாதனம்-DEVICE, பிராண்ட், தலைப்பு, எழுத்து, சொல், சொற்றொடர், குறிச்சொல்-LABEL, பெயர், கையொப்பம் ஆகிய அனைத்தையும் உள்ளடக்கியதே முத்திரை (MARK) என வகைப்படுத்தப்படுகின்றன.

மேற்கூறிய அனைத்தையும் வணிக முத்திரையாக பதிவு செய்து வணிக முத்திரை சட்டம் 1976ன்கீழ் பாதுகாக்க முடியும். சட்ட ரீதியிலான பாதுகாப்பு ஒருபுறம் இருக்க பொருள்/சேவை ஆகியவற்றிற்கும் அதன் உரிமையாளருக்கும் உள்ள தொடர்பினை காட்டவும் வணிக முத்திரை உதவுகிறது.

பெரும்பாலும் பெயர்களுடன் சின்னங்கள், வசனங்கள், எண்கள், படங்கள், வடிவங்கள், ஓவியங்கள், ஓசை வடிவங்கள் மற்றும் நிறங்கள் என ஒன்றுக்கும் பேற்பட்டவை இணைக்கப்பட்டு வணிக முத்திரையாக்கப்படிருப்பதைக் காணலாம்.

வணிக முத்திரைக்கு பதிவு செய்ய விரும்பும் தரப்பினர் முதலில் எவ்வகையான சின்னம், பெயர், சொல், சொற்றொடர்களைப் பயன்படுத்த உள்ளார் என்பதை முடிவு செய்துகொள்ள வேண்டும்.

பின்பு, 1 முதல் 45 வரையிலான வணிக முத்திரை வகுப்பில் எப்பிரிவை சேர்ந்தது என்பதை கண்டறிய வேண்டும். நம் பொருள் அல்லது சேவை எவ்வகை வகுப்பில் அடங்குகிறது என்பதை தெளிவாக அறிந்து வைத்திருப்பதன் வழி பதிவுக்காகான அடுத்தக்கட்ட நடவடிக்கைகளை எளிமையாக்கிவிட முடியும்.

இவ்வணிக முத்திரை வகுப்பு இரண்டு பிரிவுகளாக,

1.பொருள்கள் (GOODS). மற்றும்

2.சேவைகள் (SERVICES) என அவற்றின் தன்மைகள் அடிப்படையில் பிரிக்கப்படுள்ளன.

இது குறித்த சரியான வழிமுறைகளை தொழில்முனைவோர் அறிந்திருக்க வேண்டும்.

  1. உங்களுடய நிறுவனம் அளிக்க கூடிய சேவை /பொருள் எந்த பிரிவில் வருகிறது, ஏற்கனவே அந்த அப்பெயர் ட்ரேட்‌மார்க் (Trademark) பதிவுசெய்யப்பட்டுவிட்டதா என்று Intellectual Property India இணையத்தளம் மூலம் தெரிந்துகொள்ளுங்கள்.

2.விண்ணப்ப படிவத்தை பதிவிறக்க செய்து கொள்ளவும்.

3.விண்ணப்பம் பெற்றுக்கொண்டார்களா என உறுதி செய்துக்கொள்ளவும்.

4.நீங்கள் விரும்பும் Trademark இருக்கிறதா அல்லது வேறு எவரும் அதே பெயரை பதிவு செய்திருக்கிறார்களா என பார்க்கவும்.

5.பூர்த்தி செய்த விண்ணப்பபடிவத்தை Trademark அலுவலகத்திற்கு அனுப்பவும்.

6.இப்போது அதனை அவர்கள் அப்‌டேட் (Update) செய்தார்களா என அறியவும்.

7.யாரேனும் உங்கள் Trademark ஐ எதிர்க்கிறார்கள் (அவர்களும் அதே பெயரை வைத்திருப்பார்கள்) என்றால் உங்களுக்கு அது குறித்து லெட்டர் அனுப்புவார்கள்.

8.யாரும் எதிர்க்கவில்லை எனில் அதை அவர்கள் Trademark நாளிதழில் வெளியிடுவார்கள்.

9. குறைந்தது உங்கள் Trademark உங்களுடையது என்று பதிவு செய்து சான்றிதழ் வழங்க ஒன்றரை ஆண்டு முதல் இரண்டு ஆண்டுகள் ஆகிவிடும்.

10. உங்கள் Trademark விண்ணப்பித்தவுடன் நீங்கள் உங்கள் பிராண்டுடன் (brand) TM என்று பயன்படுத்தி கொள்ளலாம்.

11. பதிவு செய்யப்பட்டு சான்றிதழ் கிடைத்தவுடன் நீங்கள் உங்கள் பிராண்டுடன் R என பயன்படுத்தி கொள்ளலாம்.

மாதம் ஒருமுறை Trademark குறித்த வேலை இருக்கும் அதற்கு நிறைவேற்ற ஆலோசகர்கள் (Bgrow.in) இருக்கிறார்கள்.

ஒருமுறை பதிவு செய்ய அவர்கள் ரூபாய் 8000 முதல் 15000 வரை கேட்பார்கள். அவர்களிடம் பெயர் மட்டும் சொன்னால் போதும் அனைத்து வேலைகளையும் அவர்களே செய்து விடுவார்கள்.

அடுத்த பதிவில் வேறொரு சிறப்பான தகவலுடன் சந்திப்போம்.

MORE BLOGS FROM WRITERSRINIVASAN.IN

சமீபத்திய இடுகை

  • நிறுவனத்தின் லோகோவை உருவாக்கும்போது கவனிக்க வேண்டிய 10 விஷயங்கள்
  • LOGO-வின் முக்கியத்துவம்
  • ஒரு வணிகத்தை எவ்வாறு தொடங்குவது-PART 2
  • ஒரு வணிகத்தை எவ்வாறு தொடங்குவது: வழிகாட்டி இதோ

Leave a Reply Cancel reply

Your email address will not be published. Required fields are marked *

தொழில் முனைவோருக்கான தகவல்

எனது புதிய புத்தகம்
"பணம் - உங்கள் பிறப்புரிமை"
வெளியாகி இருக்கிறது.
படித்துவிட்டுச்சொல்லுங்கள்.


writersrinivasan@gmail.com

சமீபத்திய இடுகை

  • அவதாரம் 2.0 August 5, 2021
  • பணம் – உங்கள் பிறப்புரிமை புத்தக வெளியீட்டுவிழா! July 28, 2021
  • கவிஞர் மனுஷ்யபுத்திரனோடு ஒரு சந்திப்பு! July 19, 2021
  • பணம் – உங்கள் பிறப்புரிமை July 12, 2021
  • தொழில்முனைவோர்கள் Content Marketing யில் பின்பற்ற வேண்டிய 10 அம்சங்கள் May 6, 2021
  • வாழ்க்கையிலும் தொழிலிலும் வெற்றி பெற சில குறிப்புகள் April 22, 2021
  • வாடிக்கையாளர்களைக்கவர CONTENT MARKETING பயன்படுத்துங்கள் April 16, 2021
  • SWOT Analysis எப்படி உருவாக்குவது April 12, 2021
  • ஒரு நிறுவனத்திற்கான Trademark ஐ பெறுவது எப்படி April 9, 2021
  • நிறுவனத்தின் லோகோவை உருவாக்கும்போது கவனிக்க வேண்டிய 10 விஷயங்கள் April 8, 2021
https://www.youtube.com/watch?v=7TW7hYjxisE
©2022 தொழில் முனைவோருக்கான இணையதளம் | Powered by WordPress and Superb Themes!