PART-2
போன பதிவில் 23 பில்லியன் டாலர் நிறுவனத்திற்கு சொந்தக்காரர்!-KFC நிறுவனர் பற்றி பார்த்தோம். இந்தப் பதிவில் இவர் கடந்து வந்த பாதைகள் மற்றும் அவர் இளைஞர்களுக்கு என்ன கூற வருகிறார் என்பதை பற்றி காண்போம்.
வாடிக்கையாளர்கள் விசுவாசம்
இது புவியியல் கட்டுப்பாட்டிலிருந்து அவரை விடுவித்து, அதற்கு பதிலாக வாடிக்கையாளர்களை இந்த ப்ராண்டிற்கு விசுவாசமாக இருக்க வைத்தது.
சாண்டர்ஸ் உணவின் தரம் குறையாமல் இருக்க மேற்பார்வை இடுவதோடு , அவரது உணவின் உரிமம் விற்று அதன் மூலம் ஆதாயம் பெற்றார் (ராயல்டி).
சாண்டெர்ஸ், தனது 73 வயதில் 600 க்கும் அதிகமான இடங்களுக்கு KFC விரிவடைய செய்திருந்தார், அதனை அவரால் கட்டுப்படுத்த இயலவில்லை.
1964 ஆம் ஆண்டில், ஜான் ஒ. பிரவுன், ஜூனியர் மற்றும் ஜாக் சி. மாஸி ஆகியோரால் தலைமை தாங்கப்பட்ட முதலீட்டாளர்களுக்கு குழுவிற்கு 2 மில்லியன் டாலருக்கு (இன்று $ 15 மில்லியன் மதிப்புள்ள) நிறுவனத்தை விற்றுவிட்டார்.
KFC- யை விற்க சாண்டர்ஸ் முடிவெடுத்ததற்கு அதன் வளர்ச்சியே காரணம். கனடா, இங்கிலாந்து, ஜமைக்கா மற்றும் மெக்ஸிகோவிலிருந்த உணவகங்களுக்கு பிறகு கேஎப்சி ஆசியாவில் விரிவுபடுத்தப்பட்டது.
1970 -ல், கேஎப்சீ யின் மார்கெட்டிங் மற்றும் சாண்டர்ஸ்சின் “கர்னல் சாண்டர்ஸ்” என்ற அடைமொழி காரணமாக கேஎப்சீ உலகளவில் 3000 உணவகங்களாகவும் 48 நாடுகளுக்கும் விரிவுபடுத்தப்பட்டது.
சாண்டர்ஸ் KFC BRAND AMBASSADOR-ஆன பின்பு, பல தொலைக்காட்சி விளம்பரங்கள் மற்றும் நிகழ்ச்சிகளில் பங்கேற்றார்.
அவர் எப்போதுமே உரிமையாளர்களால் விற்கப்பட்ட கோழியின் தரத்தை பராமரிப்பதில் கவனம் செலுத்தினார்.
தனது 89 வயதில் கூட, அவர் கேஎப்சீ உணவகங்கள் எதற்கேனும் திடீர் வருகை தந்து , தயாராகும் உணவை மேற்பார்வை இடுவார்.
1980 சாண்டர்ஸ் இறக்கும் வரை 2.5 இலட்சம் மையில் அவர் பயணம் செய்ததாக Houston பல்கலைகழகம் கூறுகிறது.
கற்றுக்கொள்ள வேண்டிய பாடம்
கர்னல் சாண்டர்ஸின் வாழ்க்கை நம் வாழ்க்கையில் தோல்விகள் மற்றும் துணிச்சல் ஆகியவற்றின் பங்கு பற்றி எடுத்துக் காட்டுகிறது.
சாண்டர்ஸ் ஒவ்வொரு தோல்வியையும் வாய்ப்பாக கருதினார். ஒரு தயாரிப்பு அதன் விளம்பர யுக்தியை பொருத்து வளர்வதும் வீழ்வதும் அமையும் என்பதை உணர்த்துகிறது.
கேஎஃப்சி பொறுத்தமட்டில் பிரான்ச்சைசிங் (Franchising) மற்றும் கர்னல் என்ற தன்னியர்ப்பு பட்டம் வர்த்தக வளர்ச்சிக்கு உதவியாக இருந்தது.
மிக முக்கியமாக, சாண்டர்ஸ் நம்முடைய தொழில் வாழ்க்கையில் தரமான பராமரிப்பின் முக்கியத்துவத்தையும், தனிப்பட்ட வாழ்க்கையில் துணிச்சலோடு செயல் படுவதன் முக்கியத்துவத்தையும் நமக்குக் கற்பித்துள்ளார்.
நம்பிக்கை, கனவு, விடாமுயற்சி, அர்ப்பணிப்பு மற்றும் கடின உழைப்பு இருந்தால் எந்த வயதிலும் சாதிக்கலாம் என்பதற்கு கேணல் சாண்டர்ஸ் வாழ்க்கை பயணம் ஒரு உதாரணம். 😊
ALSO READ
23 பில்லியன் டாலர் நிறுவனத்திற்கு சொந்தக்காரர்!-KFC நிறுவனர்
சிவ நாடார்- HCL நிறுவனரின் வெற்றிக் கதை