PART-1
சமீபத்தில் வெற்றி கதைகள் பகுதியில் ராம்ராஜ் காட்டன் திரு நாகராஜன்-அவர்களை பற்றி நாம் அறிந்து கொண்டோம். அந்தப் பகுதியை நீங்கள் check செய்யவில்லை என்றால் கீழே உள்ள Link-கில் சென்று பாருங்கள்.
ராம்ராஜ் காட்டன் கடந்து வந்த பாதை
இந்த உலகில் பிறக்கும்போதே யாரும் வெற்றியாளராக பிறப்பதில்லை.
எவர் ஒருவர் தன் மீது விழும் அத்தனை கேள்விக்குறிகளையும் ஆச்சரிய குறிகளாக மாற்றுகிறார்களோ அவரே வெற்றியாளராக சாதனையாளராக அனைவராலும் மதிக்கப்படுகிறார்.
ஆம் அப்படிப்பட்ட ஒருவரை தான் நாம் இந்தப் பதிவில் காண போகிறோம்.
அவர் பெயர் ஏ.டி.பத்மாசிங் ஐசக் 😃

சமையல் ஒரு கலை. அந்த சமையலுக்கு சுவை அளிப்பது அதன்
தனித்துவமான மசாலாக்கள் தான். மசாலா என்றதுமே நம் அனைவருக்கும் நியாபகம் வருவது ஆச்சி மசாலா தான்.
திருநெல்வேலியைச் சேர்ந்த ஏ.டி.பத்மாசிங் ஐசக் என்பவரால் 1995-ம் ஆண்டுத் துவங்கப்பட்ட நிறுவனமே ஆச்சி குழுமம். இன்று ஆச்சி மசாலா தமிழகம் மட்டும் இல்லாமல் உலகளவில் பல இந்தியர்கள் பயன்படுத்தும் மசாலா பிராண்டாக மாறியுள்ளது ஆச்சி குழுமம் வளர்ந்த கதையினை விளக்கமாக இந்தக் பதிவில் பார்ப்போம்.
ஆச்சி நிறுவனம் துவங்குவதற்கு முன்பு பிபிஏ பட்டதாரியான பத்மாசிங் ஐசக். 50,000 ரூபாய் சம்பளத்திற்காகப் பணிபுரிந்து வந்தார். ஆனால் இவருக்கு எப்படியாவது மிகப் பெரிய ஒரு நிறுவனத்தினைக் கட்டமைக்க வேண்டும் என்று கனவு இருந்தது.
ஆச்சி மசாலா
வேலை பார்த்துக்கொண்டே ஆச்சி மசாலா நிறுவனத்தினை 1995-ம் ஆண்டுத் துவங்கிய ஐசக் முதன் முதல் ஒரே ஒரு மசாலாவினை மட்டுமே தயாரித்து வந்தார்.
பின்னர் 2013-ம் ஆண்டு படிப்படியாக இது 150 தயாரிப்புகளாக மாறியிருந்தன.ஆம் ஓரு முடிவை எடுத்தால் அதில் 100 சதவீத உழைப்பினை அளிப்பதில் பத்மாசிங் ஐசக்கிற்கு நிகர் வேறு யாரும் இல்லை என்று கூறலாம்.
தான் நினைத்த காரியம் முடியும் வரை சரியான தூக்கமும் இவருக்கு வந்ததில்லை, எப்போதும் அது பற்றியே நினைத்துகொண்டே இருப்பார்.
“முடியும் வரை முயற்சி செய் உன்னால் முடியும் வரை அல்ல.நீ நினைத்தது முடியும் வரை”
-என்பதற்கு தகுந்தாற் போல் அவர் எதிர்பார்த்த இலக்கை
அடைவதில் தோல்வி அடைந்தாலும் தனக்குத் தானே ஊக்கம்
அளித்துக்கொண்டு அதில் எப்படி வெற்றிபெறுவது என்றும் விடா
முயற்சியாகப் போராடுவதில் அவருக்கு நிகர் யாரும் இல்லை என்று கூறலாம்.
நிறைய விவசாயிகளிடம் இருந்து நேரடியாக விலை பொருட்களை
கொள்முதல் செய்வதால். நிறைய பேருக்கு வேலைவாய்ப்பை
உருவாக்கியிருக்கிறார்கள்.இவர்களுடைய நிறுவனத்தில் 4000 – 5000
ஏஜெண்டுகளை உருவாக்கியிருக்கிறார்கள். அதாவது அவர்களை
முதலாளிகளாக உருவாக்கியிருக்கிறார்கள்.
ஒரு நேர்காணலில் அவர் கூறியது
“ரசித்து வேலை செய்கிறவன் வாழ்க்கையில் பெரிய உயரத்தை அடைகிறான்” என பத்மசிங் ஐசக் தன் வெற்றி குறித்து பகிர்ந்துகொண்ட போது கூறினார்.
என் கல்லூரி காலம் மிகவும் அமைதியாகப் போனது. நான் எப்போதும் ஒரு சிந்தனையாளன்தான். எப்போதும் தேடல் உள்ளவன்.
ஆகையால் தான் என் ஊரிலேயே கல்லூரி இருந்த போதும் தினமும் 32 கிலோ மீட்டர் தூரம் சைக்கிளில் பயணித்து திருச்செந்தூர் சென்று பிபிஏ படித்தேன். எதையுமே வித்தியாசமாக செய்யவேண்டும் என விரும்புகிறவன்.
நான் ஒரு தெளிவான முடிவை எடுத்துத்தான் இந்த தொழிலுக்குள் வந்தேன். ஆனால் ஆறேழு வருடங்கள் கடுமையாகப் போராடினேன்.
குறிப்பாக நான் எங்கு செல்கிறேன், என்ன செய்து கொண்டிருக்கிறேன் என்பதை கனவு கண்டேன். உணவுத்துறையில் இதைச் செய்ய வேண்டும் என கனவு கண்டேன். அதற்காகப் போராடினேன்.
அதனால் வெற்றியடைந்தேன்.நம்பர் ஒன் இடத்தைப் பிடித்தேன்.
இதை நான் என் வாழ்வில் உணர்ந்துள்ளேன்.Godrej கம்பனியில் வேலை செய்தபோது, அதை என் கம்பெனி என நினைத்துத்தான் வேலை செய்தேன்.
நேரம் பார்த்து வேலை செய்தது இல்லை. ஆச்சி நிறுவனம் என் மூச்சு. ஒருவேலையை செய்யும்போது அதை சுவாசிப்பது போல் செய்ய வேண்டும். அப்படி செய்தால் வெற்றி உங்களைத் தேடி வரும்.
சவால்களை எதிர்கொள்வது தனக்குப் பிடிக்கும் என்றும் அதில் வெற்றி பெற்ற பிறகு கிடைக்கும் மகிழ்ச்சி வேறு எதிலும் கிடைக்காது என்றும் அது தான் தனது வெற்றிக்குக் காரணம் என்றும் குறிப்பிட்டுள்ளார்.
பிராண்டின் முக்கியத்துவம்
ஆச்சி நிறுவனம் 1995 ஆம் ஆண்டு ஆரம்பிக்கப் பட்டது ஒரு brand product-டை மக்களுக்கு கொண்டு செல்ல வேண்டும். அதை
சாதாரணமான மக்களுக்கு எடுத்துச் செல்ல வேண்டும் என்பதே அவர்களுடைய குறிக்கோளாக இருந்தது.
ஆச்சி மசாலா என்றதுமே நம் நியாபகத்துக்கு வருவது அவர்களுடைய வித்தியாசமான இந்த விளம்பரம் தான்.
“இனி ஒரு விதி செய்வோம் ஆச்சி மசாலா வாங்குவோம்”
அதனால் தான் அப்போது உணவுத்துறையில் பிராண்ட் என எதுவும்
இல்லாதபோது அவர்கள் ‘ஆச்சி’ என்ற பிராண்டை உருவாக்கினார்கள். இன்று ஆச்சி மசாலா நாம் அனைவரும் விரும்பும் மசாலா பிராண்டாக மாறியுள்ளது.
ஆச்சி குழுமம்
ஆச்சி குழுமத்தின் கீழ் ஆச்சி மசாலா ஃபுட்ஸ் பிரைவேட் லிமிடெட், ஆச்சி ஸ்பைசஸ் & ஃபுட்ஸ் பிரைவேட் லிமிடெட், ஆச்சி ஸ்பெஷல் ஃபுட்ஸ் பிரைவேட் ஃபுட்ஸ் லிமிடெட் போன்ற நிறுவனங்கள் உள்ளன.
தயாரிப்புகள்
முதலில் மசாலா பொருட்கள் மட்டுமே தயாரித்து வந்த ஐசக், மசாலாவுடன், கோதுமை பொருட்கள், ஊறுகாய், புளி சாத பொடி, பிஸ்கேட் மற்றும் ஜாம் போன்றவற்றையும் தயாரிக்கத் துவங்கி இன்று சத்துணவுகள், ஆயுர்வேத பொருட்கள் போன்றவற்றையும் தயாரித்து வருகிறார்.
அடுத்த பகுதியில் வெற்றிக்கான காரணம் மற்றும் இளைஞர்களுக்கு அவர் என்ன சொல்ல வருகிறார் என்பதை பற்றி காண்போம். 😊
Also Read,
ராம்ராஜ் காட்டன் கடந்து வந்த பாதை
உலகின் சிறந்த வெற்றியாளர்கள் கூறிய வெற்றிக்கான சில முக்கிய விதிகள்
முழுமையான மகிழ்ச்சியான வாழ்க்கைக்கு ஜப்பானியர்கள் சொல்லும் 10 விதிகள்