Skip to content
Menu
தொழில் முனைவோருக்கான இணையதளம்
  • எங்கள் சேவைகள்
  • என்னைப் பற்றி
  • தொடர்புக்கு
  • மகிழ் FM
தொழில் முனைவோருக்கான இணையதளம்

Positivity Mind ஈகோவை வென்றது

Posted on December 23, 2020December 23, 2020

PART-5

Hola! எனது ENTREPRENEURIAL JOURNEY-இன் 5 வது பகுதிக்கு உங்கள் அனைவரையும் வரவேற்கிறேன்.

If you haven’t read other parts, here you go

நீங்கள் மற்ற பகுதிகளைப் படிக்கவில்லை என்றால் இதோ உங்களுக்காக,

எங்கே என் வாடிக்கையாளர்? – 1

வணிகம் என்றால் என்ன? -2

என் ஆரம்பகால பயணத்தின் கதை–3

New Jersey-யில் எனது பயணம் பற்றி-4

New Jersey-யில் பயணம்-2

இது எனது சொந்த Business journey-யின் கதையாகும்.

எல்லா சூழ்நிலைகளையும், வெவ்வேறு மனநிலைகளையும், பல்வேறு பேச்சுக்கள் மற்றும் பாதைகளை நான் எவ்வாறு கடந்து வந்தேன் என்பதை பற்றி ஆகும்.

Let’s rewind to the past ! 😍🥳

எந்தவொரு உறவிலும், சிக்கல்களைத் தீர்ப்பதைத் தடுக்க ஈகோ ஒரு பெரிய தடையாக இருக்கும். அதை நீக்கினால் எந்த ஒரு பிரச்சினைக்கும் முடிவு கண்டிப்பாக இருக்கும்.

I’m pretty sure everyone has passed this egoistic mind at least in a lifetime.

ஆம். இது எனது பயணத்திலும் நடந்தது. கடந்த பதிவில்,நான் அவருக்கு ஒரு MESSAGE செய்தேன்.ஆனால் என் மைத்துனரிடமிருந்து ஒரு பதில் கிடைத்தது என்று சொன்னேன் அல்லவா.

இதுதான் எனக்கு கிடைத்த செய்தி 👇👇

“அவர் உங்களைப் பார்க்க விரும்பவில்லை, உங்களுடன் எந்தவிதமான கலந்துரையாடலும் செய்ய அவருக்கு விரும்பவில்லை”

(“He doesn’t want to see you and he’s not interested to have any kind of discussion with you”)

இந்த செய்தியைப் படித்த பிறகு நான் சிரித்தேன், உடனடியாக அவர்களுக்கு “மிகவும் நன்றி” என்று பதிலளித்தேன்.

இந்த செய்தியைப் பார்த்து நான் உண்மையில் கோபத்திலோ அல்லது வேறு எந்த மனக்கசப்பிலோ இல்லை. நான் அவமானப்படுத்தப்பட்டேன் என்ற உணர்வு கூட எனக்கு இல்லை.

அதற்கு பதிலாக,நான் யோசித்துக் கொண்டிருந்தேன் ஒரு மனிதர் இன்னொரு மனிதனை எவ்வாறு சந்திக்க மறுக்கிறார் அவர் என்ன மன நிலையில் இருப்பார் என்பதைப் கூட மறந்து.

அதுவும், நாங்கள் ஒன்றாகப் பிறந்தோம், ஒன்றாகச் சாப்பிட்டோம், ஒன்றாகத் தூங்கினோம், ஒன்றாகச் சிரித்தோம், அவருடைய ஆதி அந்தமும் என்னவென்று எனக்குத் தெரியும். அவருக்கும் அது நன்றாகவே தெரியும்.

அதற்குப் பிறகு அவர் என்னை தொடர்பு கொள்ளவில்லை.

என்னை சந்திக்க மறுக்க ஒரே ஒரு காரணம் இருக்கக்கூடும்.

அவரது EGO.

ஏனென்றால் அவர் எனக்கு பல வாக்குறுதிகளை வழங்கினார் NEW JERSEY-க்கு வரும் முன்பு. ஆனால் அவர் ஒன்றும் செய்யவில்லை!

So, this is the point where I got pushed myself from my comfort zone. I expand from this point onwards.

நான் ஏற்கனவே என் வாழ்க்கையில் ஏதாவது செய்ய நினைத்தேன். இந்த வார்த்தைகள் என்னை நிறைய மாற்றிவிட்டன.

எனது கிராமத்தில் நிறைய பேரைப் பார்த்திருக்கிறேன். அவர்களின் வாழ்க்கையில் “ஒரே வார்த்தை” அவர்களை நிறைய மாற்றியது.

எங்கள் ஊரில் ஒரு வயதான பெண்மணி இருந்தார்(என் நினைவில் இன்னமும் இருக்கிறது) அவள் இறக்கும் வரை அவள் கணவனிடம் ஒரு வார்த்தை கூட பேசவில்லை.ஏனென்றால், கணவன் மனைவி சண்டை இடையில்,கணவர் அவளை ஏதோ தகாத வார்த்தையால் திட்டி விட்டார்.

அது அந்தப் பெண்மணியை மிகவும் புண்படுத்தி இருக்கிறது.ஏன் சொல்கிறேன் என்றால் ஒரு சொல் அதாவது ஒரு வார்த்தைக்கு அவ்வளவு சக்தி இருக்கிறது.

இன்னமும் இதுபோன்ற நிகழ்வுகள் கிராமத்தில் நடந்து கொண்டேதான் இருக்கிறது.

என் சகோதரர் சொன்னதை, நான் Positive-ஆக தான் பார்க்கிறேன். மேலும் அதை என் வாழ்க்கையில் ஒரு ஊன்றுகோலாக தான் நான் எடுத்துக் கொண்டேன்.நான் இப்போது நினைப்பதை எல்லாம் சாதிக்க முடியும்.

எனது தொழில்முனைவோர் வாழ்க்கையில் தவறாமல் எனது இலக்கை அடைய முடியும். நான் தோல்வியுற்றாலும், அது ஒரு பொருட்டல்ல. இன்னும், அதற்குப் பிறகு என்னால் சிறப்பாகச் செய்ய முடியும் என்ற உத்வேகம் எனக்குள் பிறந்தது.

This is what I was thinking after seeing that message.

Trust me.

அந்த Message-யை பார்த்த பிறகு எனக்கு கோபம் வரவில்லை. ஒருவேளை எனக்கு கோபம் வந்திருந்தால், நான் அமெரிக்காவிலேயே ஒரு ஊழியராக எங்காவது வேலை செய்து கொண்டிருப்பேன்.

Thank god that I have that maturity to read the message and took it in a positive sense.

On other hand, அவர் எனது மதிப்பை உணரவில்லை.அவருக்கு தாராள மனப்பான்மையும் இல்லை.

அப்பொழுது முடிவெடுத்தேன் I wanted to create both these things by doing something more valuable to society.

Maybe my mind and soul are waiting for this kind of motivational trigger I think 😉😜

மீதமுள்ள கதையை எனது அடுத்த பதிவில் சொல்கிறேன் !

உங்கள் கருத்துக்களை,

Leave a Reply Cancel reply

Your email address will not be published. Required fields are marked *

தொழில் முனைவோருக்கான தகவல்

எனது புதிய புத்தகம்
"பணம் - உங்கள் பிறப்புரிமை"
வெளியாகி இருக்கிறது.
படித்துவிட்டுச்சொல்லுங்கள்.


writersrinivasan@gmail.com

சமீபத்திய இடுகை

  • அவதாரம் 2.0 August 5, 2021
  • பணம் – உங்கள் பிறப்புரிமை புத்தக வெளியீட்டுவிழா! July 28, 2021
  • கவிஞர் மனுஷ்யபுத்திரனோடு ஒரு சந்திப்பு! July 19, 2021
  • பணம் – உங்கள் பிறப்புரிமை July 12, 2021
  • தொழில்முனைவோர்கள் Content Marketing யில் பின்பற்ற வேண்டிய 10 அம்சங்கள் May 6, 2021
  • வாழ்க்கையிலும் தொழிலிலும் வெற்றி பெற சில குறிப்புகள் April 22, 2021
  • வாடிக்கையாளர்களைக்கவர CONTENT MARKETING பயன்படுத்துங்கள் April 16, 2021
  • SWOT Analysis எப்படி உருவாக்குவது April 12, 2021
  • ஒரு நிறுவனத்திற்கான Trademark ஐ பெறுவது எப்படி April 9, 2021
  • நிறுவனத்தின் லோகோவை உருவாக்கும்போது கவனிக்க வேண்டிய 10 விஷயங்கள் April 8, 2021
https://www.youtube.com/watch?v=7TW7hYjxisE
©2022 தொழில் முனைவோருக்கான இணையதளம் | Powered by WordPress and Superb Themes!