தமிழகத்தின் சிறு கிராமத்தில் இருந்து சென்று இந்தியா தகவல் தொழில்நுட்பம் மற்றும் கணினி அறிவியல் துறை வளர்ச்சியில் ஒரு முக்கியப் பங்கு வகிக்கும் HCL நிறுவனத்தின் தலைவர் ஷிவ் நாடாரின் கடந்து வந்த பாதையை இங்குப் பார்ப்போம்.
போன பதிவில் சிவ நாடார்- HCL நிறுவனரின் வெற்றிக் கதை பற்றி பார்த்தோம். இந்தப் பதிவில் கடந்து வந்த பாதைகள் மற்றும் அவர் இளைஞர்களுக்கு என்ன கூற வருகிறார் என்பதை பற்றி காண்போம்.
சாதனைகள்
ஆண்டுதோறும் ஃபோர்ப்ஸ் (Forbes) இதழ் வெளியிடும் உலக பணக்காரர்கள் வரிசையில் தவறாமல் இடம்பெறும் ஒரே தமிழர் சிவ் நாடார்.
2020 ஆம் ஆண்டு ஃபோர்ப்ஸ் இதழ் வெளியிட்ட “உலகின் முதல் 20 பணக்கார தொழில்நுட்ப பில்லியனர்களின் பட்டியலில் இடம் பெற்ற ஒரே தமிழர்.
கணினி வன்பொருள் (hardware) தயாரிப்பில் ஈடுபட்ட முதன்மை இந்திய நிறுவனங்களில் ஒன்று சிவ் நாடாரின் HCL நிறுவனம்.
தகவல் தொழில்நுட்ப துறையில் ஆசியா அளவில் முதன்மை நிறுவனமாக ஹெச்.சி.எல் விளங்குகிறது.
இன்று, இந்தியாவின் மூன்றாவது பெரிய மென்பொருள் சேவை
வழங்கும் நிறுவனமாக திகழ்கிறது.
உலகளவில் 49 நாடுகளில் 1,50,000 பேர் HCL டெக்னாலஜிஸ் நிறுவனத்தில் பணியாற்றுகின்றனர்.HCL நிறுவனத்தின் வருவாய் 9.9 பில்லியன் டாலர்.
பலருக்கு பணமே மூலதனம்.ஆனால் சிவ நாடருக்கோ மூளையே மூலதனம்.
அதனால் தான் எல்லோரும் செல்கிறார்கள் என்று தானும் அந்த பாதையில் செல்லாமல் தனக்கென்று ஒரு பாதையை உருவாக்கி அதில் வெற்றி கண்டு இன்று சாதனை நாயகனாக திகழ்கிறார் என்று சொன்னால் அது மிகையாகாது.
ஊழியர்களுக்கு வெகுமதிகள்
இவரது நிறுவனத்தில் பணி புரியும் சிறந்த ஊழியர்களுக்கு Mercedes-Benz கார் சம்பளத்துடன் விடுமுறை எனப் பல சலுகைகளை இவர் அளிப்பதினால் தகவல் தொழில்நுட்ப உலகில் மிகப்பெரிய அளவில் பரபரப்பாக இயங்க கூடிய பொறுப்புகளை இவரது ஊழியர்கள் பரிசாக இவருக்கு அளித்திருக்கிறார்கள் என்று கூறலாம்.
இளைஞர்களுக்கு அவர் கூறுவது
கல்விதான் ஒரு மனிதனுக்கு உண்மையான வளர்ச்சியாக இருக்கும் என்று கூறுகிறார். மக்களின் வாழ்க்கையை மாற்றும் கல்வியின் சக்தியை உறுதியாக நம்புகிறார்.
தோல்வியோ வெற்றியோ தொடர்ந்து முயற்சி செய்து கொண்டே
இருங்கள்.நிச்சயம் ஒருநாள் உங்களுக்கு வெற்றி கிடைக்கும்.
ஏன் என்றால் உங்கள் கனவு பெரியதாக இருந்தால் நீங்கள் தோற்பதற்கு தயாராக இருக்க வேண்டும்.கனவு ஒரே நாளில் நடந்து விடப்போவதில்லை.உங்கள் முடிவை தள்ளி போடாதீர்கள்.
நேரத்தை மிக சரியானதாக பயன்படுத்திக் கொள்ளுங்கள் இல்லை என்றால் நீங்கள் வாய்ப்பை இழக்க நேரிடும் என்று கூறுகிறார்.
ஷிவ் நாடார் அறக்கட்டளை
தகுதி அடிப்படையிலான தரமான கல்வியின் மூலம் இந்தியாவின் எதிர்கால தலைமுறையினரை மேம்படுத்துவதில் தனது கனவை நனவாக்க 1994 ஆம் ஆண்டில் சிவ நாடார் அறக்கட்டளையை உருவாக்கினார்.
அறக்கட்டளையின் முதல் முயற்சி அவரது தந்தையின் பெயரில் ஸ்ரீ சிவசுப்பிரமணிய நாடார் (எஸ்.எஸ்.என்) பொறியியல் கல்லூரி 1996 இல் சென்னையில் திறக்கப்பட்டது.
கல்வி தொடர்பான காரணங்களை ஆதரிக்கும் சிவ் நாடார் 662 மில்லியன் டாலர்களை அறக்கட்டளைக்கு நன்கொடையாக வழங்கியுள்ளார்.
வெளிநாடுகளில் நுழைவு
வெளிநாடுகளில் தனது வணிகத்தைச் செய்ய விரும்பிய ஷிவ் நாடாருக்கு தகவல் தொழில்நுட்ப துறை இவருக்கு மிகப் பெரிய வாய்ப்புகளை அளித்தது.
அவற்றை எல்லாம் திறம் படை கையாண்டு மிகப் பெரிய வெற்றிகளை எல்லாம் பெற்றார்.
இப்போது நிறுவனத்தின் பெறும் பகுதியான பங்குகள் இவரிடம் இருக்கும் போதிலும் தனது நிர்வாகத்தை இப்போது இவர் வழிநடத்துவதில்லை.

அவரின் மகள் ரோஷினி நாடார் பொறுப்பில் தான் HCL நிறுவனம் இயங்கி வருகின்றது.
நாம் செய்யும் காரியம் அனைத்துமே சுலபமானதாக அமைவது
இல்லை.ஆனால் இடைவிடா முயற்சியோடு செய்யும்போது அது
சாத்தியமாகிறது. 🙂
காத்திருங்கள்!
அடுத்த பதிவில் சந்திப்போம்!
Also Read,
சிவ நாடார்- HCL நிறுவனரின் வெற்றிக் கதை
ஆர்.ஜி. சந்திரமோகன்-ஹட்சன் அக்ரோ தயாரிப்பு வெற்றிக் கதை
ராம்ராஜ் காட்டன் கடந்து வந்த பாதை