நம்பிக்கையோடு உன் முதல் அடியை எடுத்து வை முழுப்படிக்கட்டையும் நீ பார்க்க வேண்டிய அவசியம் இல்லை.
முதல் படி ஏறு என்ற மார்ட்டின் லூதர் கிங் கூற்றுப் படி
நம்பிக்கையோடு தன் முதல் படியை எடுத்து வைத்து இன்று மென் பொருள் துறையில் பல கம்பெனிகளுக்கு சிம்ம சொப்பனமாய் விளங்குபவர். கணினி வழியாக உயர்ந்தவர்.
தமிழகத்தில் மட்டும் அல்லாமல் 49 நாடுகளில் தனது நிறுவனத்தை வெற்றிகரமாக தொடங்கி தமிழகத்தின் பெருமைகளுக்கு மற்றுமொரு மணி மகுடமாய் திகழும் ஒரு சாதனை தமிழர்.
அவர் தான் HCL கணினி குழுமத்தின் தலைவர் சிவ சுப்பிரமணியம் என்ற சிவ நாடார்.

ஒரு சாதாரண கிராமத்தில் பிறந்து இன்று தமிழகத்தின் நம்பர் 1 பணக்காரராக எப்படி உயர்ந்தார் என்பதை இந்த பதிவில் நாம் காணலாம்.
ஆரம்ப வாழ்க்கை
சிவ நாடார் தூத்துக்குடியில் மூலைபொழி என்னும் கிராமத்தில் ஜூலை14, 1945 ஆம் ஆண்டு பிறந்தார்.
கும்பகோணத்திலுள்ள டவுன் மேல்நிலைப்பள்ளியில் படித்தார்.
பள்ளிக் கல்வியை தமிழ் வழியில் பயின்றார்.மதுரையில் உள்ள அமெரிக்கன் கல்லூரியில் இளநிலை பட்டம் படித்தார்.
பிறகு கோயமுத்தூரிலுள்ள PSG தொழில்நுட்பக் கல்லூரியில், மின் மற்றும் மின்னணு பொறியியல் துறையில் பட்டம் பெற்றார்.
தொழில் தொடங்கும் எண்ணம்
சிவ் நாடார் 1967 ஆம் ஆண்டில் புனேவைச் சேர்ந்த வால்சந்த் குழுமத்தின் கூப்பர் இன்ஜினியரிங் நிறுவனத்தில் பணிபுரிந்தார், ஆனால் விரைவில் டெல்லி துணி ஆலைகளுக்கு (டிசிஎம்) கால்குலேட்டர் பிரிவில் ஒரு பொறியாளராக சேர்ந்தார்.
ஆனால், சிவ் நாடார் எப்போதும் சொந்தமாக தொழில் தொடங்குவதில் மிகுந்த ஆர்வம் காட்டினார்.

அதன் விளைவாக 1976 இல் அவர் ஆறு நண்பர்களுடன் டி.சி.எம்மில் இருந்து வெளியேறி மைக்ரோ காம்ப் லிமிடெட் நிறுவனத்தை நிறுவினர்.
நிறுவனம் ‘டெலிவிஸ்டா’ என்ற பெயரில் டெலி டிஜிட்டல்
கால்குலேட்டர்களை விற்றது.
மைக்ரோகாம்ப் ஆகஸ்ட் 1976 இல் இந்துஸ்தான் கம்ப்யூட்டர்ஸ் லிமிடெட் ( HCL ) என மறுபெயரிடப்பட்டது.
அரசியல் மாற்றங்கள்-சாதகங்கள்
1977 ஆம் ஆண்டில் ஜார்ஜ் பெர்னாண்டஸ் நாட்டின் தொழில்துறை
அமைச்சரானபோது, அது IBM மற்றும் COCO-COLA போன்ற பல தேசிய நிறுவனங்கள் வெளியேற வழிவகுத்தது.
எனவே இந்திய நிறுவனங்களுக்கு நல்ல வாய்ப்பு கிடைத்தது. பின்னர் 1980 ஆம் ஆண்டில் சிவன் நாடார் சிங்கப்பூரில் தூர கிழக்கு கணினி நிறுவனத்தை திறக்க சர்வதேச சந்தையில் முதலீடு செய்து, தொழிலை விரிவுபடுத்தினார்.
1982 ஆம் ஆண்டு, HCL நிறுவனத்தின் முதல் கணினி வெளியிடப்பட்டது.
HCL நிறுவனத்தின் படைப்புகள், இன்று உலகம் முழுவதும் மிகப்பெரிய வளர்ச்சியை அடைந்துள்ளது என கூறலாம்.
1984 ஆம் ஆண்டில் இந்திய அரசு தொழில்நுட்ப இறக்குமதியை அனுமதிக்க முடிவு செய்தது.
இதுவும் HCL நிறுவனத்திற்கு நல்ல வாய்ப்பாக அமைந்தது.நாட்டில் ஏற்பட்ட அரசியல் மாற்றங்கள், பொருளாதார சீர்திருத்தங்கள் அனைத்தும் கணினித் துறைக்குச் சாதகமாக அமைந்தன.
“காற்றுள்ள போதே தூற்றிக்கொள்” என்பதற்கு தகுந்தவாறு கிடைத்த வாய்ப்புகளை மிக சரியாக பயன்படுத்தி சந்தைப்படுத்துதல்,விற்பனை,வியாபாரம் என எல்லாவற்றிலும் தனது திறமையை நிரூபித்தார்.
பெற்ற விருதுகள்
1996-ல் தனது தந்தையின் பெயரில் ‘எஸ்.எஸ்.என் பொறியியல் கல்லூரியை’ சென்னையில் (தமிழ்நாடு) நிறுவினார்.
2007-ல் சென்னை பல்கலைக்கழகம், மென்பொருள் தொழில்நுட்பத்தில் இவரின் வளர்ச்சிக்காக இவருக்கு ‘டாக்டர் பட்டம்’ கொடுத்து கெளரவித்தது.
2008 ஆம் ஆண்டில், வர்த்தக மற்றும் தொழில்துறை துறையில் அவரது முன்னோடி பணி மற்றும் செல்வாக்கை அங்கீகரித்து சிவ நாடருக்கு “பத்ம பூஷண்” வழங்கப்பட்டது.
2011 ல் கரக்பூரில் உள்ள “இந்திய தொழில்நுட்ப கழக” குழுவின் தலைவராக நியமிக்கப்பட்டார்.
2015 ஆம் ஆண்டில் ஆண்டின் சிறந்த பரோபகாரர் (இரக்கமுள்ள
நன்கொடையாளர்) என்ற பெயரை Forbes International இவருக்கு வழங்கியது.
அடுத்த பகுதியில் அவர்கள் கடந்து வந்த பாதைகள் மற்றும் அவர் இளைஞர்களுக்கு என்ன கூற வருகிறார் என்பதை பற்றி காண்போம்
காத்திருங்கள்!
இவர்களின் கடந்து வந்த பாதை பற்றி தெரியுமா ?
ராம்ராஜ் காட்டன் கடந்து வந்த பாதை