Skip to content
Menu
தொழில் முனைவோருக்கான இணையதளம்
  • எங்கள் சேவைகள்
  • என்னைப் பற்றி
  • தொடர்புக்கு
  • மகிழ் FM
தொழில் முனைவோருக்கான இணையதளம்

SWOT Analysis எப்படி உருவாக்குவது

Posted on April 12, 2021April 12, 2021

நம் தொழிலின் ஒவ்வொரு கட்டத்தையும் வெற்றிகரமாக எடுத்துச் செல்வதற்கு பல்வேறு ஆய்வுகள்(Researches) மற்றும் பகுப்பாய்வுகள் (Analysis) தேவைப் படுகின்றன. இன்றைய உலகமயமாக்கல் காலக்கட்டத்தில் சிறிய நிறுவனத்தை நடத்தி வந்தாலும்  பல்வேறு ஆய்வு மற்றும் பகுப்பாய்வுகளைச் செய்யவேண்டிய கட்டாயம் ஏற்பட்டுள்ளது.

இத்தகைய ஆய்வுகளை செய்யாமல் புது யுக்திகளை புகுத்த முடியாது , புது யுக்திகளை புகுத்தாமல் இன்றைய தொழில் யுத்தத்தில் வெற்றி பெற முடியாது . அந்த வகையில் தொழிலுக்கு மிகவும் பயன்படக்கூடிய ஒரு பகுப்பாய்வு SWOT Analysis.

SWOT ANALYSIS செய்வது எப்படி

SWOT என்பது பலங்கள் (Strength), பலவீனங்கள் (Weakness), வாய்ப்புகள் (Opportunities) மற்றும் அச்சுறுத்தல்களைக் (Threaten) குறிக்கிறது, எனவே SWOT பகுப்பாய்வு என்பது உங்கள் வணிகத்தின் இந்த நான்கு அம்சங்களையும் மதிப்பிடுவதற்கான ஒரு நுட்பமாகும்.

உங்களுடைய நிறுவனத்தின் நன்மைக்காக, உங்களுக்கு கிடைத்ததை மிகச் சிறப்பாகப் பயன்படுத்த நீங்கள் SWOT பகுப்பாய்வைப் பயன்படுத்தலாம்.

தோல்வியின் வாய்ப்புகளை நீங்கள் குறைக்கலாம், உங்களிடம் இல்லாததைப் புரிந்துகொள்வதன் மூலமும், உங்களுக்குத் தெரியாமல் இருக்கும் அபாயங்களை நீக்குவதன் மூலமும் SWOT பயன்படுத்தலாம்.

முதலில், ஒரு SWOT STRATEGY MATRIX வரையவும். இது 2×2 கட்டம், SWOT இன் நான்கு அம்சங்களில் ஒவ்வொன்றிற்கும் ஒரு சதுரம். OK?

பிறகு, உங்களுடைய Strength, Weakness, Opportunities and threats பற்றி ஒவ்வொரு கட்டத்திலும் நிரப்பவும்.

பலங்கள் ( STRENGTH )

பலங்கள் என்பது உங்கள் நிறுவனம் சிறப்பாகச் செயல்படும் விஷயங்கள் அல்லது உங்கள் போட்டியாளர்களிடமிருந்து உங்களை வேறுபடுத்தும் வகையில் இருக்கும். உங்கள் நிறுவனத்திற்கு மற்ற நிறுவனங்களை விட இருக்கும் நன்மைகளைப் பற்றி சிந்தியுங்கள்.

இவை உங்கள் ஊழியர்களின் உந்துதலாக இருக்கலாம் , சில பொருட்களுக்கான அணுகல் அல்லது உற்பத்தி செயல்முறைகளின் வலுவான தொகுப்பாக இருக்கலாம். எது தனித்துவம் வாய்ந்தது என்பதை அறிந்து கொள்ளுங்கள்.

  • என்ன வளங்களை மற்றவர்களை விட குறைவான விலையில் கொள்முதல் செய்ய முடியும் ?
  • நமது நிறுவனத்தின் பலங்களாக நுகர்வோர் மற்றும் மக்கள் கருதுவது என்ன ?
  • மற்ற நிறுவனத்தின் ஊழியர்களிடம் இல்லாத என்ன திறமை மற்றும் ஆற்றல் நம் நிறுவனத்தின் ஊழியர்களிடம் உள்ளது ?
  • மற்ற நிறுவனத்தின் பொருட்களை விட நமது நிறுவனத்தின் பொருட்கள் எந்த வகையில் வேறுபட்டது ?
  • நம்மிடம் என்ன   தனித்தன்மையான விற்பனை முறைகள் உள்ளன?

இந்த வகை கேள்விக்கான பதில்கள் நமது  பலங்களே.

 உயர்ந்த தரம் (High quality), மலிவான  விலை ,பிரபலமாக இருக்கும் பிராண்ட் பெயர் (Brand Name) ,நிதி ஆதாரம் (Finance Resources) ,கடன் இல்லாமை (No Debt), திறமையான ஊழியர்கள் (Talented employee) ,சிறந்த நிர்வாகம் (Excellent management) ,மேம்படுத்தப்பட்ட   தொழில்நுட்பம் (Advanced technology), விரைவான உற்பத்தி (Fast production) போன்றவைகள் பலங்களே .        

உங்கள் நிறுவனத்தின் எந்தவொரு அம்சமும் உங்களுக்கு ஒரு தெளிவான நன்மையைக் கொடுத்தால் மட்டுமே பலம் என்பதை நினைவில் கொள்ளுங்கள். எடுத்துக்காட்டாக, உங்கள் போட்டியாளர்கள் அனைவரும் உயர்தர தயாரிப்புகளை வழங்கினால், உயர்தர உற்பத்தி செயல்முறை உங்கள் சந்தையில் பலம் அல்ல: இது ஒரு தேவை.      

பலவீனங்கள் (WEAKNESS)

இப்போது உங்கள் நிறுவனத்தின் பலவீனங்களைக் கருத்தில் கொள்ள வேண்டிய நேரம் இது. நமது பலவீனங்களை அடையாளம் காண்பதால் தொழிலை நிர்வகிப்பதற்கும், மேம்படுத்துவதற்கும் பயன்படுகிறது.

  • நம் விற்பனையை பாதிக்கும் காரணிகள் என்ன ?
  • நாம் மற்றவர்களை விட மேம்படுத்தபட வேண்டியவைகள் என்ன ?
  • எந்த வகையில் நாம் மற்றவர்களை விட பின்தங்கியுள்ளோம் ?
  • என்ன காரணிகள் நம்மை பாதிக்கின்றன ?
  • நமது நிறுவனம் மற்றும் நமது பொருட்களின் பலவீனங்களாக   நுகர்வோர் மற்றும் மக்கள் கருதுவது என்ன ?

 இது போன்ற பல கேள்விகளை எழுப்பும் போது கிடைக்கும் பதில்களே நமது பலவீனங்கள். நம் போட்டியாளர் நம்மை விட செய்யும் சிறந்தது எல்லாம் நம் பலவீனங்களே.

பலங்கள் போன்ற பலவீனமும் உங்கள் நிறுவனத்தின் உள்ளார்ந்த அம்சங்கள், எனவே உங்கள் மக்கள், வளங்கள், அமைப்புகள் மற்றும் நடைமுறைகளில் கவனம் செலுத்துங்கள். நீங்கள் எதை மேம்படுத்தலாம், நீங்கள் தவிர்க்க வேண்டிய நடைமுறைகள் பற்றி சிந்தியுங்கள்.

உங்கள் போட்டியாளர்கள் உங்களை விட எப்படி, ஏன் சிறப்பாக செயல்படுகிறார்கள் என்பதை ஆராய நேரம் ஒதுக்குங்கள் உங்கள் நிர்வாகத்திற்கு என்ன குறை என்று சிந்தியுங்கள்.

வாய்ப்புகள் (OPPORTUNITIES)

நிறுவனங்கள் ஒரு திட்டத்தை தீட்டும் முன்பும், இலக்கை நிர்ணயிக்கும்  முன்பும் வாய்ப்புகளை  அறிவது  அவசியமாகும். இந்த வாய்ப்புகளுக்கு  நமது இலக்கையும் ,திட்டமிடுதலையும் முடிவு செய்வதில் பெரும் பங்கு உண்டு.

  • விரிவடைந்து கொண்டே போகும் சந்தை(Broad Market) ,
  • தொழில்நுட்ப மாற்றம் (Changes in Technology ),
  • சந்தையில் ஏற்படும் மாற்றம் ( Changes in Market)
  • அரசாங்க கொள்கையில் மாற்றம் (Changes in Government Policy Related to Our field.) ,
  • பணப் புழக்கம் மக்களிடம் அதிகமாக இருத்தல் ,    
  • இளைஞர்களின் எண்ணிக்கை  அதிகரித்துக்  கொண்டே போகுதல் ,
  • மக்களின் ஊதியத் தொகை அதிகரித்தல ( Salary Hike) ,
  • மக்களின் வாழ்க்கை முறை ,பழக்கவழக்கள் , சமூகம் போன்றவற்றில்  ஏற்படும் மாற்றம் (lifestyle changes, population profiles, Changes in social patterns, and so on.)

இவை போன்றவையெல்லாம் வாய்ப்புகளே.ஐஸ்க்  கிரீம்(Ice Cream) தயாரிக்கும் நிறுவனங்களுக்கு கோடைக்காலம் என்பது ஒரு வாய்ப்பு , Pulsar போன்ற இரு சக்கர வாகனங்களுக்கு இளைஞர்களின் எண்ணிக்கை அதிகரிதல் என்பது ஒரு வாய்ப்பு. நகைக் கடைகளுக்கு பண்டிகை காலம் என்பது ஒரு வாய்ப்பு.

அச்சுறுத்தல் (THREATS)

Supply chain problems, சந்தை தேவைகளில் மாற்றங்கள் அல்லது ஆட்சேர்ப்பு பற்றாக்குறை போன்ற வெளியில் இருந்து உங்கள் வணிகத்தை எதிர்மறையாக பாதிக்கும் எதையும் அச்சுறுத்தல்கள் உள்ளடக்குகின்றன.

அச்சுறுத்தல்களையும், உங்கள் வளர்ச்சிக் களைகளையும் நீங்கள் பாதிக்கப்படுவதற்கு முன்பு அவர்களுக்கு எதிராக நடவடிக்கை எடுப்பது மிக முக்கியம்.

வெளிப்புறச் சுழ்நிலையில் நாம்  சந்திக்கும்  தடைகள் , பாதிப்புகள் எல்லாம் நமக்கு அச்சுறுத்தல்களே.

  • மாறிவரும் தொழில்நுட்ப நமக்கு அச்சுறுத்தல்களாக அமையலாம்   (Changes in Technology maybe Threats to Us)
  • மோசமான உள்கட்டமைப்புகள் (Poor Infrastructures-Roads,Ports,Power and so on..)
  • புதிய போட்டியாளர்களின் வரவு ( Entry of New Competitors)
  • பண வீ க்கம் (Inflation)
  • பொருளாதாரம் மந்த நிலை(Economy Recession)
  • பாதகமான அரசாங்கத்தின் கொள்கைகள் (Adverse Government Policies)
  • மக்கள் செலவு செய்வதற்கு தயங்குதல்

இவை போன்றவையெல்லாம் அச்சுறுத்தல்களே. ஒரு சில பொருட்களுக்கு வாய்ப்புகளாக  உள்ளவை மற்ற நிறுவன பொருட்களுக்கு  அச்சுறுத்தல்களாக அமையலாம்.

குடை(Umbrella)  தயாரிக்கும் நிறுவனங்களுக்கு மழைக் காலங்கள் என்பது வாய்ப்பு ,ஆனால் ஐஸ் கிரீம்(Ice Cream) தயாரிக்கும் நிறுவனங்களுக்கு அதுவே அச்சுறுத்தல்கள்.

நாம் பலவீ னங்களை பலங்களாகவும் , அச்சுறுத்தல்களை வாய்ப்புகளாகவும்  மாற்ற முயற்சிப்போம்!      

அடுத்த பதிவில் வேறொரு சிறப்பான தகவலுடன் சந்திப்போம்.

ஒரு நிறுவனத்திற்கான Trademark ஐ பெறுவது எப்படி

நிறுவனத்தின் லோகோவை உருவாக்கும்போது கவனிக்க வேண்டிய 10 விஷயங்கள்

LOGO-வின் முக்கியத்துவம் 

ஒரு வணிகத்தை எவ்வாறு தொடங்குவது: வழிகாட்டி இதோ

ஒரு வணிகத்தை எவ்வாறு தொடங்குவது-PART 2 

Leave a Reply Cancel reply

Your email address will not be published. Required fields are marked *

தொழில் முனைவோருக்கான தகவல்

எனது புதிய புத்தகம்
"பணம் - உங்கள் பிறப்புரிமை"
வெளியாகி இருக்கிறது.
படித்துவிட்டுச்சொல்லுங்கள்.


writersrinivasan@gmail.com

சமீபத்திய இடுகை

  • அவதாரம் 2.0 August 5, 2021
  • பணம் – உங்கள் பிறப்புரிமை புத்தக வெளியீட்டுவிழா! July 28, 2021
  • கவிஞர் மனுஷ்யபுத்திரனோடு ஒரு சந்திப்பு! July 19, 2021
  • பணம் – உங்கள் பிறப்புரிமை July 12, 2021
  • தொழில்முனைவோர்கள் Content Marketing யில் பின்பற்ற வேண்டிய 10 அம்சங்கள் May 6, 2021
  • வாழ்க்கையிலும் தொழிலிலும் வெற்றி பெற சில குறிப்புகள் April 22, 2021
  • வாடிக்கையாளர்களைக்கவர CONTENT MARKETING பயன்படுத்துங்கள் April 16, 2021
  • SWOT Analysis எப்படி உருவாக்குவது April 12, 2021
  • ஒரு நிறுவனத்திற்கான Trademark ஐ பெறுவது எப்படி April 9, 2021
  • நிறுவனத்தின் லோகோவை உருவாக்கும்போது கவனிக்க வேண்டிய 10 விஷயங்கள் April 8, 2021
https://www.youtube.com/watch?v=7TW7hYjxisE
©2022 தொழில் முனைவோருக்கான இணையதளம் | Powered by WordPress and Superb Themes!