டிஜிட்டல் தொழில்நுட்பம் ஒரு தொழிலின் வளர்ச்சிக்கு முக்கிய பங்காற்றுகிறது. அதேபோல் தொழிலை, ஒரு தயாரிப்பை அல்லது சேவையை சந்தைப்படுத்துவதிலும் டிஜிட்டல் மார்க்கெட்டிங்கை பயன்படுத்தும்போது தொழிலில் வளர்ச்சி அதிகரிக்கும். பலவகையான டிஜிட்டல் மார்க்கெட்டிங் (digital marketing) உத்திகள் உள்ளன. அதில் ஒன்று Content Marketing ஆகும். CONTENT MARKETING என்றால் என்ன ? Content Marketing என்பது நிறுவனம், தொழில், தயாரிப்பு (product), சேவை (service) தொடர்பானவற்றை கட்டுரையாகவோ, செய்தியாகவோ, தகவல்களாகவோ, வீடியோவாகவோ, ட்வீட் (tweet), இன்போகிராபிக்ஸ் (Infographics), மீம்ஸ் (meme), விமர்சனங்கள் (review),…