இந்தப் பதிவு என் பால்ய கால நினைவுகளில் ஒரு பதிவு. ஆம், என் மிகச்சிறிய வயதில் எங்கள் ஊருக்கு மாட்டு வண்டியில் வந்து ஒரு பெரியவர் உப்பு விற்பார் கல் உப்பு. அப்போது படிக்கணக்குதான். பெரிய படி அல்லது சிறிய படி. அப்போதெல்லாம் பண்டமாற்றுமுறையும் ஏற்றுக்கொள்ளப்பட்டது. நெல் கொடுத்து உப்பு வாங்குவது அல்லது வேறு ஏதாவது. அதற்கேற்ப அளவுகள் மாறும். அந்தப்பெரியவர் எப்போதும் காலை 4:30 மணி அல்லது 5 மணிக்கு எங்கள் வீட்டைத்தாண்டுவார். திரும்பி வரும்போது…