கிடைக்கும் வாய்ப்புகளை பயன்படுத்தி வெற்றிக்கனியை எட்டுபவர்களே சிறந்த சாமர்த்தியசாலி ஆகிறார்கள்.
ஆம்😊
அப்படிப்பட்ட ஒருவரை தான் நாம் இந்த பதிவில் பார்க்க போகிறோம்.
இவருக்கு என்னவென்று அறிமுகம் கொடுப்பது? 😃
தொழிலதிபர், அரசியல்வாதி, வியாபாரி, ஒரு டிவி சேனலின் சொந்தக்காரர் இப்படி பன்முகம் கொண்டவர் தான் அந்த மனிதர்.

வாழ்க்கையில் பல போராட்டங்களை வெற்றிகளாக்கி வசந்தமாக மாற்றியவர் தான்.
அவர் வேறு யாரும் இல்லை வசந்த்&கோ நிறுவனர் H.வசந்தகுமார்.
70 ரூபாய் சம்பளத்தில் வேலைக்குச் சேர்ந்த வசந்தகுமார் இன்று 1,000 கோடி Turn over கொண்ட வசந்த் & கோ நிறுவனத்தை வளர்த்தெடுத்ததை பற்றி பார்ப்போம்.
ஆரம்ப வாழ்க்கை
கன்னியாகுமரி மாவட்டத்தில் உள்ள அகத்தீஸ்வரம்தான் வசந்தகுமாரின் சொந்த ஊர்.1950-ம் ஆண்டு ஏப்ரல் 14-ம் தேதி அன்று பிறந்தார்.
அகத்தீஸ்வரத்தில் உள்ள பஞ்சாயத்து பள்ளியில் படித்தார். விவேகானந்தா கல்லூரியில் பி.ஏ தமிழ் இலக்கியம்
முடித்தார்.
வி.ஜி.பி-யில் வசந்தகுமார்
அப்போது சென்னையில் வேகமாக வளர்ந்துவந்த வி.ஜி.பி நிறுவனத்தின் அதிபர் வி.ஜி.பன்னீர்தாஸிடம் கணக்காளராக வேலை பார்த்தார்.
பாதிப் பணத்தைக் கட்டி, பொருளை வாங்கிக்கொண்டு மீதமுள்ள பணத்தை மாதம்தோறும் கட்டுவது அப்போது பிரபலமான நடைமுறையாக இருந்தது.
மக்கள் கட்டும் ரூ.5, ரூ.10 பணத்தை கச்சிதமாக வாங்கி, தன் அலுவலகத்திடம் ஒப்படைக்கும் வேலையை சரியாகச் செய்தார் வசந்தகுமார்.

தொழில் தொடங்கும் எண்ணம்
எட்டு ஆண்டுகள் வி.ஜி.பி யில் வேலை பார்த்தார்.சொந்த தொழில் தொடங்க வேண்டும் என்ற எண்ணம் எப்போதும் அவர் மனதில் ஆழமாய் இருந்து கொண்டு தான் இருந்தது.
ஆனால் முதலீடு செய்ய அவரிடம் பணம் எதுவும் இல்லை. வி.ஜி.பி-யில் வேலை பார்த்தபோது நன்கு பழகிய வாடிக்கையாளர் ஒருவர் தி.நகர் உஸ்மான் சாலையில் மளிகைக் கடை ஒன்றை நடத்தி வந்தார்.
அவரிடம் இருந்த கடையை வாங்கினார்.கையில் போதிய பணம் இல்லாததால் மரப்பலகை ஒன்றில் வசந்த்&கோ என்று கடையின் பெயரை அவரே எழுதி மாட்டி வைத்துக் கொண்டார்.
முதல் நம்பிக்கை
ஒரு முறை அவர் சாலையில் நடந்து சென்றபோது அவரது நண்பர் நீ தொழில் தொடங்க போகிறாயாமே ??
இதெல்லாம் நடக்கிற காரியமா? என்று அவரை பார்த்து கேட்டாராம்.
அதற்க்கு வசந்த குமார் “நடத்திக்காட்டுவதற்காகத்தான் நான் நடந்து கொண்டிருக்கிறேன்” என்று தனக்கே உரித்தான சிரிப்புடன் அவரது நண்பரிடம் கூறினாராம். 😀
முதல் விற்பனை
வாடிக்கையாளர்கள் தான் தன்னுடைய முதலீடும் வருமானமும் என்பதை தெளிவாக தெரிந்து வைத்திருந்தார் அவர்.
“Customers are the king of any business”
அப்போது அவரிடம் இருந்தது ஒரே ஒரு சைக்கிள் மட்டுமே.
சைக்கிள் கேரியரில் ஒன்றிரண்டு சேர்களைக் கட்டிக்கொண்டு, சென்னையின் எல்லாத் தெருக்களில் உள்ள வீடுகளின் படிகளையும் ஏறத் தொடங்கினார்.
“உழைப்பின் சக்தியே மிக உன்னதமானது அதை வெற்றி கொள்ளும் ஆற்றல் வேறெந்த சக்திக்கும் கிடையாது” என்பதை தெளிவாக உணர்ந்து இருந்தார்.
வி.ஜி.பி-யில் அறிமுகமான வாடிக்கையாளர்கள் அனைவரின் கதவுகளையும் தட்டினார்.அவரது உழைப்பின் முதல் வருமானம் 22 ரூபாய்தான்.
இப்படி தனது அயராத உழைப்பினால் பல நூறு பேரை தனது வாடிக்கையாளர்களாக அடுத்த சில ஆண்டுகளிலேயே ஆக்கிக்கொண்டார் வசந்தகுமார்.
விடா முயற்சி
ஒரே பாடலில் ஒருவர் கஷ்டப்பட்டு உழைத்து வெற்றி பெறுவதை நாம் அனைவரும் படத்தில் தான் பார்த்து இருப்போம்.
ஆனால் இவரது வாழ்வில் அது உண்மையாகவே நடந்தது.ஒரு
நிறுவனத்தில் வேலைபார்க்கும் பல ஆயிரம் ஊழியர்களை ஒரே நேரத்தில் தன் வாடிக்கையாளர்களாக ஆக்கிக்கொள்ள வேண்டும் என்கிற எண்ணம் அவருக்கு வந்தது.
இந்த Institutional sales-க்காக அவர் முதலில் நாடியது எண்ணூரில் இருந்த அசோக் லேலாண்ட் நிறுவனத்தை.
சென்னை தி.நகரிலிருந்து எண்ணூரில் உள்ள அசோக் லேலாண்ட்
நிறுவனத்துக்கு சைக்கிளில் செல்ல இரண்டரை மணி நேரம் ஆகும்.
ஆனால் கஷ்டம் பார்க்காமல், அந்த நிறுவனத்தின் உயரதிகாரிகளைத் தொடர்ந்து பலமுறை போய்ப் பார்த்தார்.
இருந்தும் order எதுவும் கிடைத்தபாடில்லை.
அப்போதுதான் ஆசிய விளையாட்டுப் போட்டிகளை மக்கள் டி.வி-களில் பார்த்து ரசிக்கத் தொடங்கினர். அசோக் லேலாண்ட் ஊழியர்களும் இந்தப் போட்டியை டிவியில் பார்த்து ரசிக்க விரும்பியதைத் தெரிந்துகொண்டு, அந்த நிறுவனத்தின்
அதிகாரிகளை அணுகினார்.
EMI அடிப்படையில் இந்தப் பொருள்களை விற்கத் தேவையான கடனை Shakthi finance நிறுவனம் தரத் தயார் என்பதை எடுத்துச் சொன்னவுடன், 960 கலர் டிவிகளுக்கான ஆர்டர் அவருக்கு ஒரே நேரத்தில் கிடைத்தது.
தமிழகத்தில் மட்டுமல்ல, இந்தியாவிலேயே அப்போது யாரும் செய்திராத சாதனை அது விடாமல் முயற்சி செய்தால் விஷ்வரூப வெற்றி கிடைக்கும் என்பதை நிரூபித்துக் காட்டினார்.
பல்கிப் பெருகிய வணிகம்
இதன் பிறகுதான் வசந்த் & கோவின் பிசினஸ் பல்கிப் பெருகத் தொடங்கியது. சென்னையிலும் தமிழகத்தின் பிற நகரங்களில் கிளைகள் திறக்கப்பட்டன.
குறிப்பிட்ட அளவு பணத்தை முதலில் தந்து, பொருளை வாங்கி, மீதமுள்ள பணத்தை மாதம்தோறும் கட்டும் EMI முறையை நம் மக்கள் நிறையவே விரும்பினார்கள்.
தவனை முறை விற்பனை உக்தி அவர் பொருளின் விலையில் பாதிப் பணத்தை மட்டும் 6 மாதங்களில் கட்ட சொன்னார்.
மீதிப் பணத்தைப் பொருள் விற்கப்பட்டதும் தவணை முறையில் பெற்றுக்கொண்டார். இம்முறை மூலம் யாரும் பணம் கட்டாதவர் என்னும் நிலை ஏற்படாமல் இருப்பதை உறுதி செய்து கொண்டார்.
பலரும் இந்த முறையில் Tv, washing machine and fridge போன்ற பொருள்களை வாங்கிக்கொண்டு செல்ல,Vasanth and co விற்பனை ஆண்டுக்கு ஆண்டு கணிசமாக அதிகரித்து வந்தது.
சுலபமான தவணை முறை என்பது மட்டுமல்ல, பொருள்களைத் தயாரிக்கும் நிறுவனங்களிடம் நேரடியாகப் பேசி, அதிக எண்ணிக்கையில் ஆர்டர் செய்து வாங்கியதால், விலையைக் கணிசமாகக் குறைத்து வாங்கும் சக்தி வசந்த் & கோவுக்கு
இருந்தது.
இதனால் நிறுவனத்தில் லாபம் நன்கு அதிகரித்தது.
அடுத்த பதிவில் வசந்த் அண்ட் கோ-வின் தாரகமந்திரம் மற்றும் இளைஞர்களுக்கு அவர் என்ன கூற வருகிறார் என்பதை பற்றி காண்போம் அதுவரை காத்திருங்கள். 🙂
இவர்களின் வெற்றி கதைகளையும் தெரிந்து கொள்ளலாமே,