போன பதிவில் வசந்த்&கோ நிறுவனர்- வெற்றிக் கதை பற்றி பார்த்தோம்.அதன் தொடர்ச்சியாக அவர்களின் வெற்றிக்கு காரணம் என்ன என்பதை இந்த பதிவில் நாம் காணலாம்.
எந்த ஒரு Business எடுத்துக்கொண்டாலும் வாடிக்கையாளர்களின் சேவை மிகவும் முக்கியமானவை. சரியான சேவை செய்தால் அவர்கள் நாலு பேரிடம் சொல்வார்கள். ஆங்கிலத்தில் இதை Word of mouth marketing என்று சொல்வார்கள்.
கடந்த ஆண்டு 2020 ஆகஸ்ட் மாதம் 10-தாம் தேதி இயற்கை எய்தினார். அவர் ஒரு விற்பனையாளராக தனது வாழ்க்கையைத் தொடங்கினார்,அவர் நம்மை விட்டுப் போனாலும் அவர் நமக்கு ஒரு எடுத்துக்காட்டாக இருந்திருக்கிறார்.
கஷ்டப்பட்டு படிப்படியாக முன்னேறி வந்து தனக்கான ஒரு Brand and identity உருவாக்கியுள்ளார்.
இன்றும் Vasanth and co என்று சொன்னவுடன் அவர் நாற்காலியில் அமர்ந்து கள்ள கபடம் இல்லாத அந்த சிரிப்புடன் திரும்பும் காட்சியே நம் கண் முன்னே வந்து நிற்கும் இது எவராலும் மறக்க முடியாது அல்லவா? 😊
நீங்கள் இல்லாத இடத்தில் உங்கள் பொருளை பற்றி மற்றவர்கள் என்ன பேசுகிறார்கள் என்பதே அந்த பொருளின் வெற்றியாகும்.
இதைத்தான் Vasanth and co-owner பின்பற்றினார்.
குறைகளை நிவர்த்தி செய்தல்
விற்பனைக்குப் பிறகு செய்யும் சேவை மிகப்பெரும் சவாலாகும்.100 இணைப்புகள் கொண்ட உதவி எண் சேவை உள்ளதால் யாவரும் எப்போது வேண்டுமானாலும் தொடர்புக்கு
அழைக்கலாம்.
இதற்காகவே தனியாகத் தகவல் அழைப்பு மையம் செயல்படுகிறது.
வாடிக்கையாளர்கள் பொருள்களை வாங்கிச் சென்றபின் அந்தப் பொருளில் ஏதாவது குறை ஏற்பட்டால், அதை உடனடியாகச் சரிசெய்து தரும் வேலையைக் கச்சிதமாகச் செய்து தந்ததால், ஒரு முறை Vasanth and co-வில் பொருள்களை வாங்கிய வாடிக்கையாளர்கள் அடுத்தடுத்து வாங்கி, நிரந்தர
வாடிக்கையாளர்களாக மாறினார்கள்.
மனதைக் கொள்ளை கொண்ட வெற்றியாளர்
வீட்டுக்குத் தேவையான Electronic பொருள்களை விற்கும் நிறுவனங்கள் தமிழகத்தில் பல உள்ளன. இந்த நிறுவனங்களின் அதிபர்கள் வசந்தகுமாரை ஒரு போட்டியாளராக நினைக்காத அளவுக்கு அவர்களின் மனதைக் கொள்ளை கொண்ட
வெற்றியாளர்தான் வசந்தகுமார்.
இளைஞர்களுக்கு அவர் கூறுவது
இங்கு எதுவும் சுலபம் இல்லை. ஒவ்வொன்றாக திட்டம் இட வேண்டும்.ஒரு திட்டம் வெற்றி பெற வில்லை என்றால் ஏதோ ஒரு திசையை மாற்றி முன்னேறி செல்ல வேண்டும்.
வெற்றி பெற வில்லை என்றால் மாற்ற வேண்டியது இலக்கினை அல்ல பாதையை. உழைப்பில் உள்ள கஷ்டத்தை பார்த்தால் வாழ்க்கையில் கஷ்டப்பட வேண்டியது தான்.
வாழ்க்கையில் எப்போதும் எல்லோருக்குமே ஒரு சரியான
தூண்டுதல் கிடைக்கும் .அந்த தூண்டுதலை சரியாக பயன்படுத்த வேண்டும். அப்படி பயன்படுத்துபவர்கள் நிச்சயம் வெற்றி பெறுவார்கள்.
தாரக மந்திரம்
உண்மை, உழைப்பு, உயர்வு இது தான் அவரது வெற்றியின் தாரக மந்திரமாக இருந்தது. அதை மிக சரியாக செய்ததால் தான் ஒரு சாதாரண மனிதனாக இருந்து ஒரு மிகப் பெரிய சம்பிராஜ்யத்தை அவரால் கட்டி எழுப்ப முடிந்தது.
அதனால் தான் வசந்த்&கோ என்றதும் அவர்களுடைய நிறுவனத்தின் விளம்பரமும் நமக்கு நியாபகம் வருகிறது.

ஏன் என்றால் நடிகர்களை வைத்து விளம்பரம் செய்தவர்களுக்கு மத்தியில் தன்னுடைய முகத்தையே தனது நிறுவனத்திற்கு லோகோவாக மாற்றி அதில் வெற்றி கண்டவர்.
ஒரு நேர்காணலில் அவர் கூறியது
என்னை பொறுத்தவரை நான் ஒரு அரசியல்வாதியாக இருப்பதை விட நன் ஒரு வியாபாரி என்று சொல்லிக்கொள்ளவே பெருமை படுகிறேன்.வாழ்க்கையில் வெற்றி பெற குறிக்கோள் மிக முக்கியம்.
ஏன் என்றால் வெற்றியை நோக்கி ஓட வேண்டிய உந்துதலை அது தான் கொடுக்கும்.அந்த உந்துதலில் தான் வேலையை விட்டு விட்டு தொழில் தொடங்கினேன்.
எட்டி விடும் தூரத்தில் வெற்றியும் இல்லை அதை விட்டு விடும் எண்ணத்தில் நானும் இல்லை.தொடர்ந்து முயற்சி செய்து கொண்டே இருங்கள்.
முதலில் உங்களை ஏளனம் செய்வார்கள் ஆனால் நீங்கள் ஓடிக்கொண்டே இருங்கள்.வெற்றி நிச்சயம் உங்களை தேடி வரும் என்று கூறினார்.
மக்களின் எண்ணங்களையும் மனதையும் புரிந்து செயல் பட வேண்டும். ஏன் என்றால் ஒரு நல்ல மனிதர் தான் நல்ல வியாபாரியாக இருக்க முடியும். என்பதற்கு மிக சிறந்த எடுத்துக்காட்டாக வாழ்ந்து காட்டியவர் தான் வசந்தகுமார்.
நீ இன்று செய்யும் சின்ன சின்ன முயற்சிகள் நாளை மாறும் வெற்றியின் ஆணிவேர்கள்.அந்த சின்ன முயற்சி இன்று மிக பெரிய ஆலமரமாய் வளர்ந்து நிற்கிறது.
இந்தியா முழுவதும் தன் நிறுவனத்தின் கிளைகளை திறக்க வேண்டும் என்பதே வசந்த குமார்.அவர்களின் கனவு.
ஆம்.இன்றைக்கு தமிழகம் மட்டும் அல்லாமல் பல மாநிலங்களில் 83 கிளைகள் உள்ளன.22ரூபாய் வருமானத்தில் தொடங்கிய இந்த பிசினஸ் இன்று 1,000 கோடி ரூபாய்க்கு மேல் ஆண்டு Turn over இருக்கிறது.
வீட்டுக்குத் தேவையான நுகர்பொருள்களை மக்களுக்கு
அளிப்பதில் முன்னணி நிறுவனமாக வசந்த் & கோ இருக்கிறது.
அதனால் தான் இந்த காலம் மட்டும் இல்லை எந்த காலமாக இருந்தாலும் அதுவும் வசந்த்&கோ காலம் தான் என்று
சொல்லும் அளவிற்கு அவர்களுடைய வெற்றி இருக்கிறது.
மாபெரும் லட்சியத்தையும் வெற்றியில் நம்பிக்கையையும் வாழ்க்கையில் ஏற்றுக் கொண்டால் யாரும் உயர்ந்த நிலையை அடைய முடியும்.
கடந்த ஆண்டு 2020 ஆகஸ்ட் மாதம் 10-தாம் தேதி இயற்கை எய்தினார். அவர் ஒரு விற்பனையாளராக தனது வாழ்க்கையைத் தொடங்கினார்,
மேலும் வசந்த் & கோ என்ற வீட்டு உபகரணக் கடையை ஆரம்பித்து, அதை ஒரு வெற்றிகரமான சங்கிலியாகவும் மாற்றினார்.
இந்த தலைமுறைக்கு இவர் கடந்து வந்த பாதை ஒரு motivation ஆக இருக்கும்.
“விடாமுயற்சி விஸ்வரூப வெற்றி”-அதற்கு அவர்கள் கடந்து வந்த பாதையை எடுத்துக்காட்டாகும்.
காத்திருங்கள்!
அடுத்த பதிவில் சந்திப்போம்!
Read other articles here,